அஜீத் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி  அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் விசுவாசம். விவேகம் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சிறுத்தை சிவா அஜீத் கூட்டணியில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது தான் இந்த படத்தின் ஸ்பெஷல். இந்த படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். 

இந்த ஆண்டு பொங்கல் ரிலீசுக்கு இந்த படம் தயாராகி வருகிறது. சமீபத்தில் ரிலீசாகி இருந்த இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் கூட பொங்கல் விழா போன்ற கலக்கலான பின்னணியை தான் கொண்டிருந்தது.
இரண்டு வித்யாசமான ரோலில் அஜீத் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கான் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் வைத்து தான் ஆரம்பித்தது. தொடர்ந்து ஹைதராபாத்தில் தான் இந்த படத்தி படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இது குறித்து ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆ.கே.செல்வமணி கூட ஒரு முறை வருத்தப்பட்டிருந்தார்.


இது போன்ற படப்பிடிப்புகளை தமிழ்நாட்டில் வைத்து நடத்தினால் நம்முடைய தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஹைதராபாத் என்று செல்லும் போது அங்கு இருக்கும் கலைஞர்களுக்கு தான் அண்ட வாய்ப்பு போகும். பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்போர் இது போன்ற விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என ஒரு முறை கூறி இருக்கிறார்.
தற்போது விசுவாசம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்துவிட்ட நிலையில் அடுத்ததாக சென்னையில் வைத்து தான் மீதமுள்ள படப்பிடிப்பு நடக்க உள்ளது என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

இது ஃபெப்சிக்கு மட்டுமல்ல , அஜீத் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்திருக்கிறது. மதுரை மற்றும் தேனி  போன்ற பகுதிகளை மையமாக கொண்ட கதை இது என்பதால் அந்த பகுதிகளிலும் சில நாட்கள் படப்பிடிப்பு நடக்க வாய்ப்பிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த தகவல்கள் அனைத்தும் இப்போது அஜீத் ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சி ஆக்கி இருக்கிறது.