Asianet News TamilAsianet News Tamil

குடி போதையில் வண்டி ஓட்டி விபத்து ஏற்படுத்திய விக்ரம் மகன்... ரசிகர்கர் மன்ற தலைவர் விட்ட மழுப்பல் அறிக்கை!

நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் சென்ற கார் விபத்தில் ஈடுபட்டது  கவனக்குறைவு தான் காரணம் என தனது ரசிகர் மன்ற தலைவர் சூரிய நாராயணன் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் காரில் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற ஆட்டோக்களில் மோதியதில் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துருவ் தனது நண்பர்கள் மூவருடன் மாருதி சுசுகி பலேனோ காரில் சென்றுகொண்டிருந்தார். அதிவேகமாக சென்ற கார், சென்னை தேனாம்பேட்டையில் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் வீட்டின் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற ஆட்டோக்களின் மீது மோதியது. இதில் மூன்று ஆட்டோக்கள் கடும் சேதமடைந்தன. ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு கால் முறிந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

விக்ரமின் மகன் துருவ் நண்பர்களுடன் குடி போதையில் வண்டி ஓட்டி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதினார். போலீசாரிடம் வீடியோ எடுக்க கூடாது என மிரட்டி விட்டு தப்பி ஓடும் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து விக்ரம் மற்றும் த்ருவ் தலைமை ரசிகர் நற்பணி மன்ற தலைவர் சூரிய நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,  நடிகர் விக்ரம் மகன் த்ருவ் அவரின் நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று அதிகாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் ஆட்டோவுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காருக்கும், ஆட்டோவிற்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. 

விபத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டார். இது கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட விபத்து மட்டுமே என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Video Top Stories