தமிழ் சினிமாவில் பல வருட போராட்டங்களுக்கு பின், ரசிகர்கள் மனதில் சிறந்த மனிதராகவும், முன்னணி நடிகராகவும் இடம் பிடித்தவர் நடிகர் விஜய்சேதுபதி.

இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், தனக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் குறித்தும், தான் பார்த்து வியர்ந்த மனிதர் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.

விஜய் சேதுபதிக்கு, மிகவும் பிடித்த அரசியல் தலைவர் பிரதமர் மோடி தானாம். அதே போல் இவர் பார்த்து வியர்ந்த மனிதர் பற்றி கூறுகையில், "நேரில் நிறைய மனிதர்களை பார்த்து வியர்ந்திருக்கிறேன். பல ஊர்களில் தன்னலம் பார்க்காமல் உதவி செய்கிற பல மனிதர்களைப் பார்த்து வியர்ந்திருக்கேன். ஆனால் நான் பார்த்ததில், மிகவும் வியர்ந்த மனிதர் என்றால் "தந்தை பெரியார் தான்'. ஏன்னா, அவர் அந்தக் காலத்திலேயே அவ்ளோ மெச்சூர்டா யோசிச்சாரு. அந்த சிந்தனைதான் அவரைப் புதுசு புதுசா சிந்திக்கவெச்சுது என்று நினைப்பதாக கூறுகிறார்.

இதை தொடர்ந்து, தற்போது சமூக அக்கறை மீது இவர் அதிக ஆர்வம் காட்டி வருவதால், வரும் காலத்தில் அரசியலில் கால் பதிக்கும் ஆசை இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டதற்கு. 

இதற்கு பதில் கொடுத்த விஜய் சேதுபதி, அரசியல் என்பது மிகவும் பெரிய பொறுப்பு. நான் சமூகம் சார்ந்து பேச வேண்டியது, சிந்திக்க வேண்டியது ஒரு குடிமகனா என் கடமை. மற்றபடி அரசியலுக்கு வரணுங்கிற எண்ணமில்லை என்று கூறியுள்ளார் விஜய் சேதுபதி.