சர்கார்-ஐ விமர்சிப்பதற்கு முன் இந்த விஷயத்தை கொஞ்சம் கவனியுங்க; விஜய்க்காக பேசும் விஜய் சேதுபதி;
தளபதி விஜய் நடித்திருக்கும் சர்கார் திரைபப்டத்திற்கான ஃபஸ்ட் லுக்கில், விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். இந்த காட்சியினால் விஜயினை பலரும் பலவிதமாக விமர்சித்திருந்தனர். அப்போது விஜய்க்கு ஆதரவாக விஜய் சேதுபதி பேசி இருந்தார். இது குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது அந்த கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி, பழைய படங்களில் தான் புகைப்பிடிக்கும் காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருக்கும். இப்போது அது போன்ற காட்சிகள் மிகவும் குறைந்தவிட்டன.
புகைப்பிடிக்கும் காட்சிகளை இப்போதெல்லம் படங்களில் அதிகம் பயன்படுத்துவதில்லை. மேலும் புகைக்கும் பழக்கத்திற்கு எதிரான விளம்பரம் ஒவ்வொரு படத்திலும் இடம் பெற்றிருக்கிறது.
இருந்தாலும் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. மேலும் விஜயை விமர்சித்தவர்கள் தொலைக்காட்சியில் பகல் நேரத்தில் வரும் விளம்பரங்கள் மீதும் கொஞ்சம் விமர்சனக் கண்ணோட்டத்தை செலுத்த வேண்டும்.
பகலிலேயே ஆணுறை விளம்பரங்களும், உள்ளாடைக்கான விளம்பரங்களும் வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பார்க்கும் தொலைக்காட்சியில் இது போன்ற விளம்பரங்கள் வருவதும் தவறுதான். என்ன விளம்பரம் இது என கேட்கும் என் மகளிடம் என்னால் பதிலளிக்க முடியவில்லை. முதலில் இது போன்ற பிரச்சனையை விமர்சியுங்கள் என தெரிவித்திருக்கிறார்.