எந்த நடிப்பு பின்னணியும் இல்லாமல், தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து. தன்னுடைய எதார்த்தமான நடிப்பால், பல ரசிகர்கள் மனதை கவர்ந்து, தனக்கென தனி ரசிகர்கள் படையையே உருவாக்கி உள்ளவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

திரையுலகில் இவர் அறிமுகமான போது, துணை நடிகர் வாய்ப்பு கொடுத்தவர்கள்... இப்போது இவரின் கால் சீட் கிடைக்காத என காத்துகொண்டிருக்கின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதியும், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு, தன்னுடைய நடிப்பில் வித்தியாசம் காட்டி வருகிறார்.

திரையுலகை பொறுத்தவரை, தான் உண்டு... தன்னுடைய வேலை உண்டு என இருக்கும் இவர் சமீப காலங்களாக ஒரு சில சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.  படவிழாக்கள் மற்றும் பிரஸ் மீட்டில் கூட செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்கு இரண்டே வார்த்தையில் பதில் கூறி விட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்.

இந்நிலையில் இவருடைய வாழ்க்கை பற்றி அவரே கூறியுள்ள ஒரு தகவல் விஜய் சேதுபதி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. 

விஜய் சேதுபதி, மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள  96 படத்திற்கான புரொமோஷன் படு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக எப்போதும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கு பெறாத நடிகை திரிஷா கூட தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். 

இப்படி கொடுக்கப்பட்ட பேட்டியின் போது, விஜய் சேதுபதி கதாநாயகிகளுடன் மிகவும் நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் குறித்து அவருடைய மனைவி என்ன கூறியிருக்கிறார் என்று கேட்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு பதில் கூறிய விஜய் சேதுபதி, முதல் படத்திலேயே இந்த பிரச்சனை துவங்கி விட்டதாகவும்...  இதற்காக சண்டை வந்து, விவாகரத்து வரைக்கு போனோம். ஆனால் இப்போது என் மனைவிக்கு இது பழகி விட்டது அதனால்  என்னை மன்னித்து விட்டாள் என்று நினைப்பதாக கூறியுள்ளார்.