தளபதி விஜய்யின் அப்பாவான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்   ‘கேப்மாரி’ எனும் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இத டிரெய்லர் இப்போது ரிலீஸாகி இருக்கிறது. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் ஆபாசம், இரட்டை அர்த்தம், தொப்புள்ள் காட்சி, குளியலறை காட்சி, படுக்கையறை காட்சி என்று பற்றி எரிகிறது டீசர். வசனங்களில் உள்ள கேடுகெட்ட வார்த்தைகளையும், அதற்கான காட்சியமைப்புகளையும் பார்த்துவிட்டு விஜய்யின் ரசிகர்கள் ‘அப்பாவா இப்படி?’ என்று நெளிய, அஜித் ரசிகர்களோ விமர்சித்து தள்ளுகின்றனர். 

சட்டம் ஒரு இருட்டறை!  நீதிக்கு பின் தண்டனை!  நான் சிகப்பு மனிதன்....என்று ஒரு காலத்தில் புரட்சிகரமான படங்களை எடுத்து இளைஞர்களின் மன எழுச்சிக்கு ஒரு தூண்டுகோளாக இருந்தவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன். தளபதி விஜய்யின் அப்பா இவர். ஆனால் தள்ளாத வயதில் அவர் எடுத்திருக்கும் படம் படு தரக்குறைவான படமாக அமைந்திருப்பதால் விமர்சனங்கள் வெளுத்துக் கட்டுகின்றன. 
’ஷவர் பண்ணும்போது கடல் பண்ணா நல்லா இருக்கும்! ஒண்ணும் தெரியாத பொண்ணா இருந்தால் ஓவர் நைட்ல ஓ....! கல்யாணமாகி அது வீரியமா இருக்கும்போதே புள்ள குட்டிகளை பெத்துப் போட்டுடணும்டா! அவருக்குதானே கல்யாணமாகி இருக்குது, எனக்கு இன்னும் ஆகலைல!’ என்று டீசர் நெடுகவே நாராசமான, விரசமான டயலாக்குகள் இருக்கின்றன. டீசரைப் பார்த்துவிட்டு விஜய்யின் ரசிகர்கள் ‘பொதுவா நல்ல அப்பாவின் பெயரை கெட்ட பையன் கெடுப்பான்னு சொல்வாங்க. ஆனால் இங்கே நல்ல பையனான நம்ம தளபதியின் பெயரை இந்த கெட்ட அப்பா கெடுக்குறாரே! தளபதியோட நல்ல பெயரை டேமேஜ் பண்றார்.’ என்று  கொதித்துள்ளனர். 

ஆனால்  இதற்கு பதில் தந்திருக்கும் தல அஜித்தின் ரசிகர்களோ ‘உங்க தளபதி என்ன பெரிய நல்லவரா? அவங்க அப்பா டைரக்‌ஷன்ல நடிச்சப்ப பாத்ரூம் ஓட்டை வழியா பக்கத்து வீட்டு லேடிக்கு முதுகுல சோப்பு போட்டு விட்டவர்தானே! அப்படித்தான் நடிக்க வெச்சார் அவங்க அப்பா? முத்தமிடவா, முத்தம் அது இதுன்னு எப்பவுமே விரசமான டைட்டில் வைக்கிறது, விரசம் வழிய படம் எடுக்கிறதுதானே உங்க தளபதியோட அப்பா ஸ்டைலு. கேவலம் இந்த வயசுல இப்படியொரு புத்தியா இவருக்கு. இப்படியொரு கேவலமான படம் ரெடியாகுறது அவரோட மகனுக்கு தெரியாமலா இருக்கும்? எல்லம் காசுக்காக ஊரை கெடுக்குறாங்க. ஆனா எங்க தல அஜித்தை பார்த்தீங்ளா, பெண் குழந்தைகள் பாதுகாப்பு! பெண் பாதுகாப்புன்னு வரிசையா தரமான படங்களா பண்ணிட்டிருக்கார். படிங்கடா அவர்கிட்ட பாடத்தை.” என்று விளாசியுள்ளனர்.