நேற்று வெளியான எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகள் குறித்து மறைமுகமாகப் பேசிய நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. தமிழகத்தைப் பொறுத்தமட்டிலும் தப்பிச்சிட்டோம்னு நினைக்கிறேன். ஆனா மத்தியில மறுபடியும் அவங்கதான்னா எல்லாரும் காவியைக் கட்டிக்கிட்டு அலையவேண்டியதுதான்’என்று அதிரடியாகப் பேசினார்.

’காப்பாத்துங்க நாளைய சினிமாவை’ என்ற குறும்பட வெளியீட்டு விழா வடபழனியின் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆட்சிக்கு வருபவர்களின் முக்கிய நோக்கமே சினிமாவை அழிப்பதாகத்தான் இருக்கிறது என்று நேரடியாகக் குற்றம் சாட்டினார்.

”சினிமாவில் இருந்து முதலமைச்சரானவர்களும் சினிமாவை வளர்க்க நினைக்கவில்லை.  எங்கே வளர்த்து விட்டால், முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து விடுவார்களோ என்று நினைக்கிறார்கள். அரசியலிலும் சினிமாவிலும் தற்போது இருப்பவர்களில் 90 சதவிகிதம் பேர் திருடர்கள்.

நேற்றைய நிலவரங்களை வைத்துப் பார்க்கிறபோது தமிழகத்துல தப்பிச்சுட்டோம்னு நினைக்கிறேன். ஆனா மத்தியில வாக்காளர்கள் மறுபடியும் மறுபடியும் தப்புப்பண்றாங்க. அடுத்தும் அவங்களே தான் வருவாங்கன்னா நாம எல்லாரும் காவியைக்கட்டிக்கிட்டு அலையுறதைத் தவிர வேறு வழியில்ல’ என்று அதிமுக, பா.ஜ.க கூட்டணி மேல் மிக ஆத்திரத்துடன் பேசினார் எஸ்.ஏ.சி.விஜய்யின் ‘சர்கார்’ படத்துக்கு அதிமுகவினர் கொடுத்த இம்சையை அவ்வளவு ஈஸியாக மறந்து விடுவாரா என்ன?