தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய். இவருக்கு தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர்.

நடிகர் விஜய்யை பொறுத்தவரை, ரசிகர்களின் உணர்வுகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பவர். இதுவே அவரை முன்னணி இடத்திற்கு கொண்டுவந்துள்ளது.

மேலும், சமூக பிரச்சனைகள் வரும் போது சைலண்டாக செல்லமால் தன்னுடைய மனதில் பட்ட கருத்தை வெளிப்படையாக பேசுவதும் இவருடைய பலம் என்று கூறலாம்.

இது ஒருபுறம் இருக்க, தளபதியின் அப்பா - அம்மா இருவரும் தஞ்சாவூருக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது, விஜய்யின் ரசிகர் மன்ற தலைவர் மகேஷ் அவர்களை தங்களுடைய வீட்டுக்கு அழைக்க, அவருடைய அழைப்பை ஏற்று இருவரும் அவருடைய வீட்டிற்கு திடீர் என விசிட் அடித்துள்ளனர்.

அங்கு அனைவருடனும் மிகவும் எளிமையாக பேசி பழகியது மட்டும் இன்றி, மகேஷின் குடும்பத்தினருக்கு தளபதியின் அம்மா தோசை சுட்டு பரிமாறியுள்ளார்.

இதுகுறித்த சில விடியோக்கள், மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது....