"கைதி" புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் "மாஸ்டர்'' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாத இறுதியில் விஜய் சேதுபதி சம்பந்தமான காட்சிகள் கர்நாடக மாநிலம் சிவமோகாவில் படம் பிடிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 

சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியா, கெளரி கிஷன், சேத்தன், அர்ஜுன் தாஸ், ஆர் ஜே ரம்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சமீபத்தில் வெளியான ''மாஸ்டர்'' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சோசியல் மீடியாவில் தாறுமாறாக வைரலானது. இந்த படத்தில் முதன் முறையாக விஜய் மீசை இல்லாமல் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள ''மாஸ்டர்'' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. இருந்தாலும் விஜய் ரசிகர்களின் மனதை புண்படுத்த விரும்பாத இயக்குநர் லோகேஷ் கனகராஜ், முதன் முறையாக மாஸ்டர் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோவை வெளியிட்டுள்ளார். 

பொங்கல்  வாழ்த்துடன் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி உள்ளது. அத்துடன் அந்த ட்வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு மாஸ்டர் படத்தின் செகன்ட் லுக் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பொங்கலை இன்னும் மாஸாக கொண்டாடி வருகின்றனர்.