ஒரு ஆபாசத்துக்கு இன்னொரு ஆபாசம் பதில் என்றால் சமூகமே அழுகி,நாற்றம் அடிக்கும் குப்பைமேடு ஆகிவிடும் என நடிகர் விவேக், இயக்குநர் சேரனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா - கவின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் பலருக்கு பேசும் பொருளாக மாறியது. இவர்களது காதலுக்கு லாஸ்லியாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த இவர்கள் இருவரும், சந்தித்துக் கொள்ளாததற்கு காரணம் சேரன் தான் என ட்வீட்டர் பக்கத்தில் ரசிகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கோபம் கொண்ட இயக்குனர் சேரன், கவின் – லாஸ்லியா வாழ்வில் குறுக்கே நிற்க எனக்கு அவசியமில்லை. இன்னொரு முறை என் நாவில் அவர்கள் பெயர் வராது என காட்டமாக தெரிவித்து இருந்தார்

.

இது குறித்து நடிகர் விவேக், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சேரன் சார்! நீங்கள் மிக சிறந்த சமுதாய நோக்கம் உள்ள தேசிய விருது பெற்ற படைப்பாளி. ஆகவே விஜய் சொல்வது போல் “ ignore negativity”. அஜீத் சொல்வது போல் “ let go”. நல்ல கருத்தினை பதிவிட்டு அமைதி, ஆனந்தமுடன் இருங்கள். அமைதி. 

 

ஒரு ஆபாசத்துக்கு இன்னொரு ஆபாசம் பதில் என்றால் சமூகமே அழுகி,நாற்றம் அடிக்கும் குப்பைமேடு ஆகிவிடும். அமைதியாக அதை கடந்து சென்றால், அது மக்கி மண்ணாகி விடும். எப்போதும் உயர்ந்த நேர்மறை மற்றும் மாணவர் இளையோரை ஊக்குவிக்கும் பதிவுகளே இந்த சமுதாயதிற்கு நன்று. இதுவே என் கருத்து’’என அறிவுறுத்தி உள்ளார்.