நடிகர் விஜய் நடித்த, மெர்சல் படத்தில் நெற்றில் பட்டை, குங்கும  பொட்டு, என விஜயின் மகனாக நடித்திருந்தவர் அக்ஷ்த். இவருடைய பிறந்த நாளுக்கு, கேமரா ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார் விஜய். 

மெர்சல் குட்டி பையன் அக்ஷரத்துக்கு விஜய் என்றால் அவ்வளவு பிரியம். இதனால் விஜய் எப்போது வேண்டுமானாலும், அக்ஷத் தன்னை வந்து பார்க்கலாம் என ஸ்பெஷல் பர்மிசன் கொடுத்துள்ளாராம். மேலும் விஜயுடன் மற்றொரு படத்திலும் சேர்ந்து நடிக்க ஆசை படுவதாகவும் சில பேட்டிகளில்  அஷ்த் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு, விஜயை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து, வாழ்த்து பெற்றுள்ளார் அக்ஷத்.  அப்போது, அசத்தலான கேமரா ஒன்றை பரிசாக கொடுத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் விஜய். இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.