Asianet News TamilAsianet News Tamil

வெளியானது சர்கார் படத்தில் விஜயின் கேரக்டர் பற்றிய ஸ்வாரஸ்ய தகவல்...

சர்கார் படத்திற்காக அமெரிக்காவில் பிரமாண்டமாக உருவாகவுள்ளலாஸ் வேகஸ்ஸில் பாடல் ஒன்று உருவாகவுள்ளது.

Vijay character in sarkar leaked out

சர்கார் படத்திற்காக அமெரிக்காவில் பிரமாண்டமாக உருவாகவுள்ளலாஸ் வேகஸ்ஸில் பாடல் ஒன்று உருவாகவுள்ளது. மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன்’ பாடலுக்கு நடனம் அமைத்த ஷோபி, இந்தப் பாடலுக்கும் நடனம் அமைக்கிறார். விஜய், தனது படங்களில் ரசியல் வசனங்களை அதிகமாகசத் தொடங்கிவிட்டார். கடந்த ஆண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்த"மெர்சல்" படத்தில் GST, டிஜிட்டல் money உள்ளிட்டவற்றை கடுமையாக விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஒரு தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தாலும், விஜய் பேசிய அரசியல் வசனங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

Vijay character in sarkar leaked out

இந்நிலையில், அடுத்து வெளியாக உள்ள "சர்கார்" படத்திலும் அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக இணையத்தில் ஒரு செய்தி கசிந்தது. இதனால் சர்கார் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு கூடியுள்ளது. "சர்கார்" என்ற பெயரே அரசியல் பேசுவதாக விஜய் ரசிகர்கள் ஏக எதிர்பார்ப்பில் உள்ளனர். சர்கார் குறித்து மற்றொரு ஸ்வாரஸ்ய தகவலும் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் விஜய் கணினி நிபுணர் அதாவது ஸ்டைலிஷ் டெக்கியாகத் தோன்றுகிறாராம். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ். முக்கியமான கதாபாத்திரத்தில் வரலட்சுமி, ராதா ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். Vijay character in sarkar leaked out

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சத்தமின்றி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களாகச் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் க்ளைமாக்ஸ் பாடலுக்காகப் படக்குழு இன்று அமெரிக்கா பறந்துள்ளது. விஜய், வரலட்சுமி உள்ளிட்டோர் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்குச் செல்கின்றனர். மெர்சல்’ படத்தில் வெளியான மாச்சோ…’ பாடல் போன்று சர்கார் படத்தின் கடைசிப் பாடல் பெப்பி’யாக உருவாக்கப்பட உள்ளதாம். அந்தப் பாடல்தான் அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில், ஆகஸ்ட் 5 முதல் 11 வரை படமாக்கப்பட உள்ளது. ஆகஸ்டு இறுதிக்குள் படப்பிடிப்பு வேலைகளை முழுமையாக நிறைவடைந்துவிடுமாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios