ஸ்டைல், கெட்-அப்பை மாற்றும் தளபதி விஜய்: தாறுமாறாய் குதூகழிக்கும் ரசிகப்புள்ளிங்கோ!

*    தர்பாரை என்னதான் வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊற்றினாலும் கூட வசூல் என்னமோ வகையாகத்தான் இருக்கிறது. படம் எப்படி இருந்தால் என்ன? என்று தொடர் விடுமுறை தினங்களைக் கொண்டாடும் நோக்கில் கூட்டம் குவிவதால் ஐந்து நாட்களில் நூற்று ஐம்பது கோடி வசூலை தாண்டிவிட்டதாம். இந்த கலெக்ஷன் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஹேப்பிதானாம். 
(நாட்டுல நிதி நெருக்கடின்னு என்னமோ சொல்றானுங்க! ஆனா ரஜினி படம் மட்டும் அள்ளுது)

*    யாருடைய பயோபிக் படங்களெல்லாமோ வந்து போய்க் கொண்டிருக்கின்றன, ராகவேந்தன் இளையராஜாவின் பயோபிக் வராவிட்டால் எப்படியாம்? இதோ அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா இதற்கு தயாராகிவிட்டார். ‘ராஜா தி ஜர்னி’ என  டைட்டிலும் தயாராகிவிட்ட இப்படத்தில் இளையராஜாவாக நடிப்பது யார் தெரியுமா? தனுஷ்! யுவனின் சாய்ஸ் இந்த நடிப்பு அசுரன் தான். 
(நம்ம கிட்ட தெறம இருந்தா யாராலையும் அத எடுக்க முடியாதுல சிதம்பரம்)

*    மில்க் பியூட்டி! என்று தென்னிந்திய சினிமாக்காரர்களால் கிக்காக அழைக்கப்படுபவர் தமன்னா. பொண்ணு சினிமா உலகத்துக்கு வந்து பல வருடங்களாகிப் போச்சு. பாகுபலி! போல் சர்வதேச வெற்றியையும் பார்த்தாச்சு, ஆக்ஷன்! போல் லோக்கல் ஃபிளாப்பையும் பார்த்தாச்சு. ஆனாலும் பொண்ணு எப்பவும் கலகலன்னு இருக்குது. 
(இந்த பாலில் கலக்க எந்த டிகாஷன் வரப்போகுதோ?)

*    சேனல்கள், சோஷியல் மீடியாக்களின் ஆதிக்கம் இல்லாத காலத்தில் கமல்ஹாசனின் பொது இட போட்டோக்கள் குறைவாகதான் வரும். படத்துக்கு படம் அவர் கெட்- அப் மாற்றி எப்போதாவது வெளியில் எடுக்கப்படும் போட்டோவுக்கு தலை காட்டுவார். அவரது உருவ மாற்றத்தை கண்டு மிரள்வார்கள் ரசிகர்கள். ஆனால் இன்று சோஷியல் மீடியா தாக்கத்தினாலும், அவர் அரசியலுக்குள் வந்துவிட்டதாலும் கிட்டத்தட்ட தினமுமே அவரது நடவடிக்கைகள் பற்றிய போட்டோக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதனால் கமல்  பற்றிய பிரமிப்பு லைட்டாக குறைந்துள்ளதாக தகவல். 
(அதுக்காக உலக நாயகன் ஒளிஞ்சு வாழ முடியுமா?)

*    கிரிக்கெட் தல டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் போல, தளபதி விஜய்யின் அடுத்தடுத்த சினிமா மூவ்களும் அதிரடி ஆஸம்! ஆக இருக்கின்றன. பிகில் பட ஷூட்டின் போதே ‘மாஸ்டர்’ படத்தின் கதையை கேட்டு ஓ.கே. பண்ணி, அறிவிப்பையும் வெளியிட்டார். அதேபோல் இப்போது மாஸ்டர் ஷூட் பாதியை தாண்டிப் போய்விட்ட நிலையில், அடுத்த படத்தினை ஓ.கே. பண்ணிவிட்டார். 

நாம் ஏற்கனவே சொல்லியிருந்தது போலவே இது பாண்டிராஜ் இயக்கும் படம்! என தெரிகிறது. மாஸ் அண்டு ஸ்டைலி கெட் - அப் மற்றும் கேரக்டர்களில்  தொடர்ந்து நடித்துக் கொண்டே இருப்பதால் ஒரு சேஞ்ச் மற்றும் ரிலாக்ஸ்க்காக கிராமத்து சப்ஜெக்ட்டில் விஜய் நடிக்கிறார் இதில்! என்கிறார்கள். 
(அப்ப பேரரசு கிராமத்து இயக்குநரில்லையா?)
-    விஷ்ணுப்ரியா