குழந்தையை கொஞ்சும் தளபதி விஜய்! குழந்தையாவே மாறிட்டாரு பாருங்களேன்..!
தளபதி விஜயின் சர்கார் ரிலீஸ் தேதி நாளுக்கு நாள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கத்தி, துப்பாக்கி திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவதாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சர்கார். சர்கார் என்று தலைப்பிற்கேற்ப சில அரசியல் வசனங்களையும், அரசியல் காட்சிகளையும் இந்த படத்தினுள் முருகதாஸ் சேர்த்திருக்கிறார் என வெளியாகி இருக்கும் தகவல்களால், இந்த படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
அதே சமயம் அரசியல் வட்டாரத்திலும் சர்கார் வரவு மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சர்கார் பரபரப்புகளுக்கு இடையே தளபதி விஜய்-ன் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பிரபலமாகி இருக்கிறது. சின்ன் குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.
தளபதி விஜய் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? ஒரு அழகான குட்டிக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு விஜய் கொஞ்சும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கு அந்த வீடியோ.
சில நொடிகளே நீளம் உள்ள வீடியோவாக இது இருந்தாலும் இந்த வீடியோவில் இருக்கும் அழகு குழந்தை, அந்த குழந்தையை கொஞ்சும் தளபதி விஜய், அவர் குழந்தையை கொஞ்சும் விதம் என அனைத்துமே க்யூட்டாக இருப்பதால் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
தளபதி விஜய்... ஒரு குழந்தையோடு குழந்தையாகவே மாறி கொஞ்சி விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் மிகவும் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.