Asianet News TamilAsianet News Tamil

தனுஷ் படத்தில் நடிக்கும் விஜய்...! ஆச்சர்ய அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகர் தனுஷ் நடித்து வரும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில், ஜோசப் விஜய் என்கிற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரையும் ஆனந்த அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

vijay acting in dhanus moive
Author
Chennai, First Published Sep 1, 2018, 8:00 PM IST

நடிகர் தனுஷ் நடித்து வரும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில், ஜோசப் விஜய் என்கிற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரையும் ஆனந்த அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

நடிகர் விஜயை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் கோலிவுட் திரையுலகில் போட்டி போட்டு வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் கெளதம் மேனனும், விஜய்யை வைத்து 'யோஹன் அத்தியாயம் ஒன்று' என்கிற  படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார்.

vijay acting in dhanus moive

அந்த படத்தின் ஃபஸ்ட் லுக் வெளிவந்த போதிலும் இந்த படம் கைவிடப்பட்டது. இதை தொடர்ந்து, திரும்பவும் இந்த படத்தை எடுக்க கெளதம் மேனன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதே போல், விஜய்க்கும் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது.

இந்நிலையில், தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான 'என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தை இயக்குனர் கெளதம் மேனன் இயக்கி வருகிறார். கதாநாயகனாக தனுஷ் மற்றும் கதாநாயகியாக மேகா ஆகாஷ் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். 

vijay acting in dhanus moive

ஏற்கனவே நடிகர் சசிகுமார், மற்றும் தெலுங்கு நடிகர் ராணா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது ஜோசப் விஜய் என்கிற கேரக்டரில் நடிகர் விஜய்யும் கெஸ்ட் ரோலில் நடித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios