’பெண்களுக்கு நாற்பது வயதுக்கு மேல் ஆகும்போது அவர்களுக்கு செக்ஸ் உணர்வு குறைந்துவிடுவது போலவும், அதில் நாட்டமில்லாதவர்களாக ஆகிப்போவது போலவும் சித்தரிக்கப்படுவது மிகவும் தவறானது. எனது நாற்பதாவது வயதுக்குப் பின்னர் ஏற்கனவே இருந்ததை விட இன்னும் ஹாட்டாக உணர்கிறேன்’ என்கிறார் அஜீத்தின் அடுத்த பட நாயகி வித்யாபாலன்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றாலும் வித்யாபாலம் முழுநேர மும்பைவாசிதான். பல வருடங்களாகே இந்தி சினிமாவின் நம்பர் ஒன் நட்ச்த்திரம் என்றால் அது வித்யாபாலன்தான். படங்களில் கவ்ர்ச்சியாக நடிப்பதிலும் தடாலடியாகப் பேட்டி கொடுப்பதிலும் வித்யா பாலனை அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனலாம்.
 
இந்த நிலையில் சமீபத்தில் தனது உறவினர்களுடன்  40வது பிறந்த நாள் கொண்டாடியுள்ள வித்யா பாலன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 40 வயதை கடந்த காரணத்தினால் வயதானதாக உணர்கிறிர்களா என்று செய்தியாளரகள் கேட்டனர். அதற்கு, ’தற்போது தான் நான் மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக கருதுகிறேன். மேலும் இப்போது தான் நான் மிகவும் சேட்டைகள் செய்ய ஆரம்பித்துள்ளேன். சொல்லப்போனால் செக்சில் புதிது புதிதாக இப்போது தான் ஆசைகள் வர ஆரம்பித்துள்ளன. எனக்கு மட்டுமல்ல இது பெரும்பாலான பெண்களுக்கும் பொருந்தும்.

 எனக்கு   20 வயது ஆகும்போது எனது வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். 30 வயதில் அந்த கனவை நிறைவேற்ற பாடுபட்டுக் கொண்டிருந்தேன். தற்போது கனவை நிறைவேற்றிய  மகிழ்ச்சியில் இருக்கிறேன்.  40 வயதைக் கடந்த நிலையில் மிகவும் இளமையாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும் நான் என்னை உணர்கிறேன். பொதுவாக 40 வயது ஆகிவிட்டால் பெண்கள் செக்ஸில் ஆர்வமாக இருப்பதில்லை என்பதெல்லாம் கட்டுக்கதை’ என்று போட்டுத்தாக்குகிறார் வித்யா பாலன்.