தல அஜித்தின் "நேர்கொண்ட பார்வை"  படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளவர் நடிகை வித்யா பாலன். இவர் கடற்கரையில் குழந்தை போல் விளையாடி மகிழ்ந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகை வித்யா பாலன், திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து கதைக்கும், கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த, படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். 

அந்த வகையில், அஜித் நடித்து வரும் 'பிங்க்' படத்தின் ரீமேக் மூலம், தமிழில் முதல் முறையாக நடிக்கிறார். மேலும் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றி எடுக்கப்பட உள்ள வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இவர் எங்கு வெளியில் சென்றாலும், அழகாக புடவையில் தான் வருவார். அப்படி இல்லாமல் இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக மாடர்ன் உடையில் கடல் தண்ணீரில் குழந்தை போல் விளையாடி மகிழ்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இந்த புகைப்படத்தில் வித்யாபாலன் மிகவும் கியூட்டாக இருக்கிறார், கவர்ச்சியாக இருக்கிறார் என ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.