''வேட்டை நாய்'' படத்திற்காக உதவிய மூன்று முன்னணி நடிகர்கள்..!

vettai nai moive teaser released three actors
First Published Jul 6, 2018, 12:33 PM IST | Last Updated Sep 19, 2018, 3:18 AM IST



இயக்குனர் பாலா, இயக்கத்தில் 'தாரதப்பட்டை' படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானவர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். தற்போது 'வேட்டை நாய்' படத்தின் மூலம் கதாநாயகனாக மாறியிருக்கிறார்.

இந்த படத்தின் டீசரை நடிகர்கள் விஷால் ,ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகிய மூன்று நடிகர்களும் இணைந்து  சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். 

சுரபி பிக்சர்ஸ், தாய் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'வேட்டை நாய் '. இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார். நடிகர் ராம்கி முக்கிய வேடமேற்று நடித்திருக்கிறார். நாயகியாக சுபிக்ஷா நடிக்க ரமா, நமோ நாராயணன், விஜய் கார்த்திக், மற்றும் பலரும் நடிக்கிறார்கள் . 

இப்படத்தை ஜெய்சங்கர் இயக்குகிறார். ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுகம் கணேஷ் இசையமைக்கிறார்.

இது குறித்து தெரிவித்துள்ள படத்தின் நாயகன் ஆர்.கே.சுரேஷ்  தன் படத்தின் டீசரை முன்னணி நாயகர்கள் வெளியிட்டு இருப்பது பெருமையாக உள்ளது என தெரிவித்துள்ளார். 
 

Video Top Stories