பிரபல நட்சத்திர தம்பதிகள், விஜயகுமார் - மஞ்சுளாவின் மூத்த மகளும், நடிகையுமான வனிதா, திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு ஒதுங்கினார்.

பின்னர் நடிப்பின் மீது ஆர்வம் காட்டாமல், திரைப்படம் தயாரிக்கும் முயற்சியில் இறக்கிறார். வனிதா பிலிம் புரோடுக்ஷன் சார்பாக, நடன இயக்குனர் ராபர்டை காதாநாயகனா வைத்து 'எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்' என்கிற படத்தை தயாரித்தார். ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெற்றிபெறவில்லை. 

இதை தொடந்து, ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு, கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. பிக்பாஸ் வீட்டை விட்டு ஒரு சில வாரத்திலேயே வெளியேற்றப்பட்ட இவர், மீண்டும் வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்தார். துரதஷ்ட வசமாக குறைவான ஓட்டுகள் கிடைத்ததால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதை தொடர்ந்து, விஜய் டிவி தொலைக்காட்சியில் 'குக் வித் கோமாளி' என்கிற நிகழ்ச்சி மூலம் உள்ளே நுழைந்தார். முதல் ஃபைனலிஸ்ட்டாகவும் தேர்வுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின், பைனல் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இதில், வனிதா, உமா ரியாஸ் , ரேகா, ரம்யா பாண்டியன் என நான்கு பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தினர்.

இறுதியில், வனிதா இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றுள்ளார். இதனை வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மகிழ்யோடு தெரிவித்து புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். மேலும் இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

View this post on Instagram

Thank u @vijaytelevision

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on Feb 24, 2020 at 5:13am PST

வனிதாவுக்கு பரிசாக 2 லட்சம் ரொக்க தொகையை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை ரம்யா கிருஷ்ணன் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.