பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வைஷ்ணவி தான் எவிக்‌ஷனில் வெளியேறினார். பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களை பொறுத்தவரை தான் அவர் வெளியேறி இருக்கிறார். மற்றபடி வைஷ்ணவி பிக் பாஸ் வீட்டின் ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார் என்பதை, மக்கள் அறிவர். முன்னர் இதே போல சுஜாவை ரகசிய அறையில் தங்க வைத்தனர் என்பது கூறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்ச்சிக்கான பிரமோவில் வைஷ்ணவி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.  முன்னர் பிக் பாஸ் வீட்டில் இருந்த வைஷ்ணவிக்கு, தன் சக போட்டியாளர்கள் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் இப்போது இருக்கும் வைஷ்ணவிக்கு, வீட்டில் இருக்கும் நபர்களில் யார்? யார்? எப்படிப்பட்டவர் என்பது ஓரளவிற்கு புரிந்திருக்கும்.

இதனால் பிக் பாஸ் வைஷ்ணவியிடம் உங்கள் புரிதலின் அடிப்படையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இவர்களுக்கு வரிசைப்படுத்தி பட்டங்கள் வழங்குங்கள் என கூறி இருக்கிறார். இதில் வைஷ்ணவி முதலில் பிக் பாஸ் வீட்டின் நேர்மையான மனிதர் யார்? என வரிசைப்படுத்துகிறார். அதற்காக டேனியை முதலில் அந்த பக்கம் செல்ல சொல்கிறார். இதனால் டேனியை தான் அவர் நேர்மையான நபர் என கூற வருகிறார் போல என தோன்றுகிறது.

That darrrru moment! 🤣🤣😂#பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/TMLcratvGJ

— Vijay Television (@vijaytelevision) August 2, 2018

உண்மையில் வைஷ்ணவி யாரை பார்த்து அப்படி கூறினார் என, நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரியும். எது எப்படியோ வைஷ்ணவியின் இந்த வரவு பிக் பாஸ் வீட்டில் பலருக்கு பிடிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இந்த பிரமோவை பார்க்கும் போது. இதனால் இந்த வீட்டின் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அது தானே பிக் பாஸுக்கு வேண்டியதும்....