கவிஞர் வைரமுத்து வீட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் அவரின் லீலைகள் வெளிவரும் என்றும், எனக்கு பாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அவரது லீலைகளை அம்பலப் படுத்துவேன் என்று அதிரடியாக களத்தில் குதித்துள்ளார் பாடகி சின்மயி.  

பெண் பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு 18 வயது இருந்தபோது, வைரமுத்து வீட்டுக்கு சென்றிருந்தேன்…அப்போது திடீர் என அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

நான் வைரமுத்து மீது மிகுந்த, மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தேன். அவர் இப்படி செய்வார்  என நான் எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டிருந்தார். ஆனால் உடனே அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டிருந்த பதிவை டெலிட் பண்ணிவிட்டார்.

ஆனால் அதற்குள் இந்த டுவீட்டை பலர் ஸ்கீரின் ஷாட் எடுத்து ரீடுவிட் செய்துவிட்டனர். இந்நிலையில் பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் 5 வருடத்திற்கு முன்பே இந்த குற்றச்சாட்டை பேசியிருக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.

ஒரு முறை சுவிட்சர்லாந்தில் பாட்டுக் கச்சேரிக்கு சென்றிருந்தோம். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்றுவிட்டார்கள். நானும் என் அம்மாவும் மட்டும்தான் இருந்தோம்.. அப்போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் வந்து, கவிஞர் வைரமுத்த உங்களுக்காக ஹோட்டல் ரூமில் வெயிட் பண்ணுகிறார் என தெரிவித்தார்.

நான் அப்போதே அவர் முகத்திரையைக் கிழித்திருப்பேன்.. அவர் மீது திரையுலகம் வைத்திருந்த மரியாதைக்காக விட்டுவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

அவரை பற்றி  0.2 சதவீதமே பேசி உள்ளேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் வைரமுத்துவின் பல லீலைகள் தெரியும் என குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மையை சொல்வதால் திரைப்படங்களில்  பாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் கவலையில்லை  என சின்மயி ஆவேசமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சின்மயியின் இந்த குற்றச்சாட்டுக்கு ட்விட்டர் மூலம் பதில் கொடுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து. அதில் "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்". என கூறியுள்ளார்.