அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கியுள்ள 'சிக்ஸர்' படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த படத்தில் முதல் முறையாக நடிகர் வைபவ், அடித்து நொறுக்கும் ஆக்ஷன் கதாநாயகனாக நடித்து உள்ளார்.

கதாநாயகியாக தெலுங்கு நடிகை பல்லாக்  லால்வாணி நடித்துள்ளார்.  மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சதீஷ், ராமர், மற்றும் ராதாரவி ஆகியோர் நடித்துள்ளனர்.  90  நொடிகள் வெளியாகியுள்ள இந்த டீசரில் வைபவ் ஆக்சன் காட்சிகள், காதல், காமெடி என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. 

இந்த படத்தை தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் வால்மேட் என்டர்டெடயன்மெண்ட்   அசோசியேசன் சார்பில், ரவிச்சந்திரன் பேனரில் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்துள்ளது. 

 ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.  சிக்ஸர் என பெயரிடப்பட்டுள்ளதால், இது கிரிக்கெட் படமாக இருக்கலாம் என பலரும் எதிர்பார்த்த நிலையில், முற்றிலும் வேறுபட்ட கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

மேலும் சின்னத்தம்பி படத்தில் எப்படி நடிகர் கவுண்டமணி  6 மணிக்கு மேல் கண் தெரியாதவர் போல் நடித்திருந்தாரோ அதே போல் வைபவ் நடித்துள்ளார். கவுண்டமணியை நினைவு படுத்தும் சில காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளது. 

இந்த படத்தின் டீசர் இதோ..