Asianet News TamilAsianet News Tamil

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க முடியாது! அரசியல் வாதிகளிடம் விட்டுக்கொடுக்காமல் பேசிய வடிவேலு!

நடிகர் வடிவேலு இல்லாத மீம்ஸ்களே இல்லை என கூறும் அளவிற்கு, பல மீம்ஸுகள் நடிகர் வடிவேலுவை வைத்து உருவாகிவிட்டது. மீம்ஸ் கிரியேட்டர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், வடிவேலு படத்தில் நடிக்காவிட்டாலும், இப்போதும் நம்மை சிரிக்க வைத்து வருகிறது. தங்களுடைய மூளையை கசக்கி பிழிந்து, மீம்ஸுகள் உருவாக்குபவர்கள் பற்றி எழுப்ப பட்ட கேள்விக்கு மிகவும் உற்சாகமாக ஊடகம் ஒன்றில் கொடுத்த பேட்டியில் பதில் கொடுத்துள்ளார் வடிவேலு.
 
vadivelu replay appreciate the memes creator
Author
Chennai, First Published Jun 5, 2019, 3:33 PM IST

நடிகர் வடிவேலு இல்லாத மீம்ஸ்களே இல்லை என கூறும் அளவிற்கு, பல மீம்ஸுகள் நடிகர் வடிவேலுவை வைத்து உருவாகிவிட்டது. மீம்ஸ் கிரியேட்டர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், வடிவேலு படத்தில் நடிக்காவிட்டாலும், இப்போதும் நம்மை சிரிக்க வைத்து வருகிறது. தங்களுடைய மூளையை கசக்கி பிழிந்து, மீம்ஸுகள் உருவாக்குபவர்கள் பற்றி எழுப்ப பட்ட கேள்விக்கு மிகவும் உற்சாகமாக ஊடகம் ஒன்றில் கொடுத்த பேட்டியில் பதில் கொடுத்துள்ளார் வடிவேலு.

vadivelu replay appreciate the memes creator

இதுகுறித்து அவர் பேசுகையில்... "மீம்ஸ் கிரியேட்டர்கள் செயல் ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும், ஒரு பக்கம் பீதியா இருக்கு.  
சில அரசியல் வாதிகள் கூட போன் செய்து, இப்படி செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு எதிரா கண்டனம் தெரிவிக்க மாட்டீங்களா என கேட்டனர். 

மீம்ஸ் போடுறவங்க மூஞ்சி கூட தெரியாது எப்படி கண்டனம் தெரிவிக்க முடியும், என கூறி கண்டனம் தெரிவிக்க முடியாது என தன்னுடைய ரசிகர்களை விட்டுக்கொடுக்காமல் கூறியுள்ளார். 

vadivelu replay appreciate the memes creator

மேலும் அவருடைய மனதில் பதிந்த, மீம்ஸ் ஒன்றையும் கூறியுள்ளார். "ஒருமுறை சட்டசபையில் நடந்த பிரச்சனையில் ஸ்டாலின் சட்டை கிழிந்து விட்டதாக வெளியே வந்து அவர் கிழிந்த சட்டையை காட்டுகிறார்.  இதற்கு தன்னுடைய புகைப்படத்தை போட்டு, சண்டைனா  சட்ட கிழிய தான செய்யும், சண்டையிலே கிழியாத சட்டை எங்க இருக்குனு போட்டிருந்தாங்க.  எனக்கு பகீர்னு இருந்துச்சி என கூறியுள்ளார்.

vadivelu replay appreciate the memes creator

தொடர்ந்து பேசிய அவர், மீம்ஸ் கிரியேட்டர்களை பார்க்க வேண்டும் என ஆசை படுகிறேன். திரையுலகத்தில், தன்னை ஒரு சிலர் ஒழிக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் அப்படி பட்டவர்கள் மத்தியில் மீம்ஸ் மூலம் தன்னை பிரபலப்படுத்தி வருகிறார்கள் என்னுடைய ரசிகர்கள். இந்த வளர்ச்சி தான் சிலருக்கு பிடிக்கவில்லை என பேட்டியில் கூறியுள்ளார் வடிவேலு.

Follow Us:
Download App:
  • android
  • ios