சிவா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வரும் "விஸ்வாசம்"  ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ட்விட்டரில் டிரென்ட் ஆகி வருகிறது. ஃபர்ஸட் லுக் போஸ்டரில் இளம் அஜித், வயதான அஜித் என்று இரண்டு கெட்டப்பில்  அசத்தலாக வருகிறார் தல. அஜித் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அருமை என்று கொண்டாடுகின்றனர்.

விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்து ட்விட்டரை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். #ViswasamFirstLook என்ற ஹேஷ்டேக் இந்தியா அளவில் ட்விட்டரில் முதலிடத்தில் டிரெண்டாகியுள்ளது. இந்த  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பற்றி அஜித் ரசிகர்களா ஜாலியாக கலாய்த்து டிவிட்டர் போட்ட சம்பவமும் நடந்துள்ளது.

இதோ தல ரசிகர்களின் டிவீட்...

தல இரண்டு வேடத்துல நடுச்சத தியேட்டர்ல போய் ரசிகர் ஷோ பாத்தது இல்லை. இந்த படத்துக்கு தான் 1st டைம் போக போறேன் மரண வெய்ட்டிங். ஒரு தலக்கே ஆட்டம் அடங்காது இரண்டு தல வேற பட ரிலீஸ் ஆகுற நாள நினைசசாலே கூஸ்பம்ஸா இருக்கு என viknesh என்பவர் டிவீட் செய்துள்ளார்.

மீசை இருந்தா இந்திரன்... இல்லாதவன் சந்திரன்னு சொல்றா மாதிரி  வெள்ளை முடி இருந்தா அண்ணன் கருப்பு முடி இருந்தா தம்பினு இருக்குமோ

மாறுவேஷத்துக்கு உண்டான மதிப்பு போச்சேடா😕

சரி தல ரசிகரா போயிட்டோம் வழக்கம்போல சமாளிப்போம்... என முகநூளில் பதிவிட்டுள்ளார்.