2018ம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக கருத்து தெரிவித்தார். ரஜினியின் இந்த பேச்சு போராட்டக்காரர்களை கொதிப்படையச் செய்தது. இதையடுத்து சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்க கோரி, ரஜினிக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியது. 

இதையும் படிங்க: படுக்கையறையில் நண்பருடன் கிளுகிளுப்பு குத்தாட்டம் போட்ட ஷெரின்... வைரலாகும் வீடியோ...!

தான் நேரில் ஆஜரானால் தனது ரசிகர்கள் கூட்டம் கூடும், அதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று தெரிவித்த ரஜினிகாந்த், நேரில் ஆஜராவதற்கு விலக்கு கோரியிருந்தார். ரஜினியை தலைவா, தலைவா என தலைமேல் வைத்து கொண்டாடும் ரசிகர்களை இப்படி கேவலப்படுத்தியது, பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது. 

இதையும் படிங்க: சும்மா கெத்தா.. செம்ம ஸ்டைலா... ஐதராபாத் விமான நிலையத்தை கலக்கிய நயன்தாரா..!

ரஜினி ரசிகர்கள் என்ன அவ்வளவு மோசமானவர்களா? வழக்கு விசாரணைக்கு ஆஜராக விலக்கு வேண்டும் என்றால் இப்படித்தான் ரசிகர்களை கேவலப்படுத்துவாரா? என கண்டமேனிக்கும் விமர்சனங்கள் வெடித்து எழுந்தன. இதையடுத்து ரசிகர்கள் குறித்த ரஜினியின் சர்ச்சை கருத்தால் கொதித்தெழுந்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது டுவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டாரை கிழி, கிழியென கிழித்துள்ளார். 

'போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டார்கள்' என்று சொல்ல தூத்துக்குடி சென்றபோது கெடாத சட்டம் ஒழுங்கு, விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்போது மட்டும் கெட்டுவிடுகிறதா?... ரசிகர்கள் கூடி சட்டம் ஒழுங்கு சீர்குலையுமென்றால், உங்கள் ரசிகர்கள் யார்?... இது எப்டி இருக்கு?! என ரஜினியை சகட்டுமேனிக்கு விமர்சித்துள்ளார்.