Asianet News TamilAsianet News Tamil

ரஜினி படத்திற்காக திரிஷா செய்த தியாகம்..!

'காலா' படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. 

trisha cut the hair for rajinikanth movie
Author
Chennai, First Published Aug 27, 2018, 7:57 PM IST

'காலா' படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. 

இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் இமயமலை பகுதிகளில் நடத்தப்பட்டது. அங்குள்ள ஒரு கல்லூரியிலும் சில முக்கிய காட்சிகள் படமாக்கினர் படக்குழுவினர். இதனால் இந்த படத்தில் ரஜினி அந்த கல்லூரி வார்டன் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

trisha cut the hair for rajinikanth movie

அதிரடி காட்சிகள், நகைசுவை நிறைந்த ஜனரஞ்சகமான படமாக இந்த எடுக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இமையமலையை தொடர்ந்து சென்னை,  மதுரை, உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்கிறார் என ஏற்க்கனவே தகவல்கள் வெளியானது. மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , பாபிசிம்ஹா முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடிக்கின்றனர் என கூறப்பட்டது. 

trisha cut the hair for rajinikanth movie

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவில் இந்த படத்தில், கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளதாகவும் சிம்ரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக திரிஷா தன்னுடைய தலைமுடியை வெட்டிக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பெண் முடியை வெட்டிக்கொள்வதால் அவளுடைய வாழ்க்கையில் சில மாற்றங்கள் நடக்கலாம் என பதிவிட்டுள்ளார். 

இந்த வருட இறுதிக்குள் பட வேலைகளை முடித்து அடுத்த வருடம் ஆரம்பத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ் என்பது குறிப்பிடத்தக்கது . 


 

Follow Us:
Download App:
  • android
  • ios