ஆடை பற்றி பேசி... தன்ஷிகாவை அழ வைத்த டி.ஆர் (வீடியோ)

tr scolding dhanshika
First Published Sep 30, 2017, 1:47 PM IST | Last Updated Sep 19, 2018, 3:17 AM IST



நடிகை தன்ஷிகா கபாலி படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் இவர் தற்போது  எழுத்தாளர் மீரா கதிரவன் இயக்கும் விழித்திரு படத்தில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு ஆகியோருடன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் என பன்முகம் கொண்ட  டி.ஆர்., ஒரு மாஸ் பாடலையும்  பாடியிருக்கிறாராம். 

அண்மையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது மேடையில் பேசிய நடிகை தன்ஷிகா, தனது பேச்சின் போது, டி.ஆர் பெயரை  குறிப்பிட மறந்துவிட்டாராம்.

இதன் பின்னர் பேச வந்த டி.ராஜேந்தர், இதுகுறித்துக் குறிப்பிட்டு, கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் தன்ஷிகா நடித்து விட்டதால் சாதாரணமான மற்றவர்கள் எல்லாம், அவருடைய கண்ணனுக்கு தெரியவில்லையோ என்று குறிப்பிட்ட டி.ஆர்., வழக்கமான தனது அடுக்கு மொழி வசனத்தை அவிழ்த்து விட்டு, தன்ஷிகாவைத் திட்டித்தீர்ப்பது போல் பேசியுள்ளார்..

இதனால் வருத்தப் பட்ட தன்ஷிகா, தான் அவர் பெயரைக் குறிப்பிட மறந்ததற்காக, டி.ஆரிடம்  மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அதற்கும் டி.ஆர்.,   'நீ கட்டிட்டு வரல சாரி; எனக்கு ஏன் உன்னோட சாரி!" என்று மீண்டும் தன்ஷிகாவை சுட்டிக் காட்டி  மட்டமாகப் பேசியுள்ளார். ஒரு கட்டத்தில், தன்ஷிகா டி.ஆர் காலில் விழுந்தும் அதனை நக்கல் செய்வது போல்  , மேடை நாகரீகம் வேண்டும் என தன் பாணியில் விடாமல் 10 நிமிடம் அவரை வறுத்தெடுத்து விட்டார். இதனால் தன்ஷிகா மேடையிலேயே கண் கலங்கி அழுதேவிட்டாராம்.

Video Top Stories