ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு பிரபலம் வெளியேற்றப்படுகிறார். அந்த வகையில் இதுவரை மமதி, ஆனந்த் வைத்தியநாதன், நித்யா ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்நிலையில் நான்காவதாக வெளியேற உள்ளது யார்? என ரசிகர்களால் கூட கணிக்க முடியாத அளவிற்கு உள்ளது.  

காரணம் இந்த வாரம் எவிக்சன் பட்டியலில், ரம்யா, பொன்னம்பலம், பாலாஜி, ஜனனி மற்றும் இருந்திருக்கும், யார் மிகவும் குறைவான ஓட்டுக்களை பெற்றிருப்பார் என யூகிக்க முடிய வில்லை.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த வாரம் யார் வெளியேற வேண்டும் என்கிற முடிவை பிக்பாஸ் தான் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதேபோல், இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பை நேரில் சென்று பார்த்த ஒரு சிலர் சமூக வலைத்தளத்தில், இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளது ரம்யா என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் ரம்யா வீட்டை விட்டு வெளியேறும் புகைப்படமும் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளத்தில் இது போன்ற தகவல்கள் உலா வந்தாலும், இன்று யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.