கடந்த மாதம் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவை போலவே. டிக் டாக்கில் ஒரு பெண் தோன்றி, டப் மேஷ் செய்து வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

அதை தொடர்ந்து, தற்போது டிக் டாக்கில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி போன்று ஒரு பெண், தோன்றி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

இவரது பெயர் ராக்கி என்றும், பொழுது போக்கிற்காக இதுபோன்ற வீடியோவை அவர் வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர் வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோவை பார்த்து, ரசிகர்கள் பலர் ராக்கி பார்பதற்கு, ஸ்ரீதேவி போன்றே இருப்பதாக தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி, ரஜினி, கமல், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். பின் பாலிவுட் திரையுலகிற்கு சென்று அங்கும் லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்தவர் நடிகை ஸ்ரீதேவி.

திருமணம், குழந்தை என ஆன பிறகு சில காலம், திரையுலகை விட்டு ஒதுங்கிய ஸ்ரீதேவி, ரீஎண்ட்ரி கொடுத்த, சில வருடங்களிலேயே... குடும்ப நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக துபாய் சென்றபோது, மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வரை அவரது இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு உண்மையாகவே இருந்து வரும் நிலையில் ராக்கியின் வீடியோ வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

அந்த வீடியோ இதோ...