டிக்கட் பணத்தை திருப்பிக்குடுங்க... தொடரும் ‘சர்கார்’குழப்பம்... பரபர வீடியோ!

மறு சென்சார் முடிந்ததன் மூலம் சர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்தது போல் தெரிந்தாலும், அதிமுகவோ விஜய் தரப்போ அது குறித்த முறையான அறிவிப்புகளை வெளியிடாததால் இன்னும் தமிழகத்தின் பல்வேறு தியேட்டர்களில் கூச்சல் குழப்பம் நீடிக்கிறது.

First Published Nov 9, 2018, 2:03 PM IST | Last Updated Nov 9, 2018, 2:03 PM IST

மறு சென்சார் முடிந்ததன் மூலம் சர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்தது போல் தெரிந்தாலும், அதிமுகவோ விஜய் தரப்போ அது குறித்த முறையான அறிவிப்புகளை வெளியிடாததால் இன்னும் தமிழகத்தின் பல்வேறு தியேட்டர்களில் கூச்சல் குழப்பம் நீடிக்கிறது.

இன்று நண்பகல், தாராபுரத்தில் சர்க்கார் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன்பாக அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் செய்யபோவதாக அறித்திருந்த நிலையில் படம் திரையிடப்பட்டுள்ள எஸ்.வி்.ராம்.தியேட்டர் ,சத்தியா தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யபட்டதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது. 

அப்போது தியேட்டர் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.கவினர் சத்தியா தியேட்டர் வளாகத்திற்குள் புகுந்து அங்கு வைக்கபட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை கிழித்தெறிந்தனர் . அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .இந்நிலையில் சர்க்கார் படக்காட்சி ரத்து செய்யபட்டதாக அறிவித்த எஸ்.வி.ஆர்.திரையரங்கில் எதிர்ப்பையும் மீறி சர்க்கார் படம் திரையிடப்பட்டதாக தகவல் கிடைத்ததால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் எஸ்.வி.ஆர்.திரையரங்குக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். அடுத்து தியேட்டர்கள் சிலர்  அதிமுகவினரால்  தாக்கப்பட்டனர்.

இந்த குழப்பம் முடிவை எட்டாமல் நீடித்துக்கொண்டே இருந்ததால் பொறுமையிழந்த ரசிகர்கள் பட டிக்கெட்டை திரும்பப்பெற்றுக்கொண்டு தங்கள் பணத்தைத் திரும்பத்தருமாறு தியேட்டர் நிர்வாகத்தை முற்றுகையிட ஆரம்பித்துள்ளனர்.