துப்பறிவாளன்' மேக்கிங் வீடியோ:
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த வாரம் வெளியாகி தற்போது வரை அனைத்து திரையரங்குகளிலும் வசூல் சாதனை செய்து வரும் திரைப்படம் 'துப்பறிவாளன்'.
கடந்த சில வருடங்களாக வெற்றிப் படத்தைக் கொடுக்க போராடி வந்த விஷாலுக்கு இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் பிரசன்னா, சிம்ரன், வினய், அணு இமானுவேல், ஆண்ட்ரியா ஆகியோரும் அவரவர்களுக்கான கதாபாத்திரத்தில் அருமையாக ஸ்கோர் செய்துள்ளனர். இவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் நடித்த மேக்கிங் காட்சிகள் இதோ....