Asianet News TamilAsianet News Tamil

இங்கிலாந்தில் விஷாலுடன் செகென்ட் இன்னிங்சை தொடங்கிய மிஷ்கின்!... பிரிஸ்டலில் 'துப்பறிவாளன்-2' ஷுட்டிங் ஆரம்பம்!...

 'புரட்சி தளபதி' விஷால் - இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் "துப்பறிவாளன்". ஆக்ஷன், திரில்லர் ஜானரில் டிடெக்டிவ் படமாக உருவான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் அளித்த அமோக வரவேற்பு, மிஷ்கின் - விஷாலுக்கு கம்பேக்காக அமைந்தது. 

thupparivalan  2 shooting start
Author
Chennai, First Published Nov 4, 2019, 8:19 PM IST


 'புரட்சி தளபதி' விஷால் - இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் "துப்பறிவாளன்". ஆக்ஷன், திரில்லர் ஜானரில் டிடெக்டிவ் படமாக உருவான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் அளித்த அமோக வரவேற்பு, மிஷ்கின் - விஷாலுக்கு கம்பேக்காக அமைந்தது.  

குறிப்பாக, கணியன்பூங்குன்றன் என்ற கேரக்டரில் துப்பறிவாளனாக விஷால் நடித்திருந்தது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 
முதல் பாகத்துக்கு கிடைத்த அசத்தலான வரவேற்பை தொடர்ந்து, மீண்டும் விஷால் - மிஷ்கின் கூட்டணி சேர்ந்துள்ளது. 

thupparivalan  2 shooting start

"துப்பறிவாளன்-2" என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை, முதல் பாகத்தை தயாரித்த விஷாலே தயாரிக்கிறார். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஆஷ்யா கமிட்டாகியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த பிரசன்னாவும், விஷாலுடன் மீண்டும் இணைந்துள்ளார். 

thupparivalan  2 shooting start

துப்பறிவாளனுக்கு இசையமைத்திருந்த அரோல் கொரோலிக்கு பதிலாக துப்பறிவாளன்-2க்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். நேர்கொண்ட பார்வை, நம்ம வீட்டு ராஜா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, துப்பறிவாளன்-2வுக்காக மிஷ்கினுடம் இணைந்துள்ளார். 

thupparivalan  2 shooting start
இந்தப் படத்தின் பெரும்பாலான பகுதியை இங்கிலாந்தில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதற்காக, மிஷ்கின், விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் இங்கிலாந்து சென்றுள்ள நிலையில், அங்குள்ள பிரபலமான பிரிஸ்டல் நகரில், 'துப்பறிவாளன்-2' படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்கியுள்ளது. தொடர்ந்து, லண்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 40 நாள் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios