விஜய் ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் தற்போது 'சர்கார்', திரைப்படமும், அஜித் - சிவா கூட்டணியில்  'விசுவாசம்' சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் 'என்.ஜி.கே' என முக்கியமான நடிகர்களின் மூன்று படங்கள் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. இந்த மூன்று படங்களும் தொடங்கும் போதே... தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திரையுலகினர் நடத்திய ஸ்டிரைக், உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக, படப்பிடிப்புகள் முடிவு பெற தாமதம் ஏற்பட்டது. இதனால் அஜித்தின் 'விசுவாசம்' பொங்கல் ரிலீஸ்சாக மாறியது. 

மேலும் விஜயின் சர்கார் படத்துக்கும், சூர்யாவின் என்.ஜி.கே படத்திற்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் 'என்.ஜி.கே' படம் தீபாவளிக்கு வெளியாகாது என படத்தின் இயக்குனர் செல்வராகவன் அறிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, "இந்தப் படத்துல நல்ல விஷயம் சொல்லப்போறோம். அதனால் கொஞ்சம் தாமதமாகும், 'தீபாவளிக்கும்', பொங்கலுக்கும் வரதுக்கு இது பட்டாசும், பொங்கச்சோறும் கிடையாது. இது சினிமா படம், எப்ப வரணுமோ... அப்பத்தான் வரும்'னு என பாலா அண்ணன் அடிக்கடி சொல்லுவாரு என கூறி, சைக்கிள் கேப்பில், விஜய் மற்றும் அஜித்தை போட்டு தாக்கினார். 

இந்நிலையில் எதிர்ப்பார்த்த விஷயங்கள் எதுவும் நடக்காத நிலையில், எதிர்ப்பாராத ஒரு விஷயம் நடக்க உள்ளது. நீண்ட நாட்கள் படப்பிடிப்பில் இருந்த தனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி வந்த 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சில நாட்களுக்கு முன் முடிந்துவிட்டது. இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிடப்போவதாக அறிவித்திருக்குகிறார் கெளதம். இதனால் புதிதாக விஜய்யின் சர்காருடன் , தனுஷின் தோட்டாவும் மோத உள்ளது உறுதியாகியுள்ளது. 

இப்படி ஒரு சென்ட்டிமென்ட்டா..? 2007 தீபாவளிக்கு விஜய்யின், 'அழகிய தமிழ் மகன்' படமும், தனுஷின் 'பொல்லாதவன்' படமும் வெளியானது இதில் வெற்றி பெற்றது என்னவோ தனுஷின் 'பொல்லாதவன்' திரைப்படம் தான். இதே போல் 2009 ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் 'வில்லு' படமும், தனுஷின் 'படிக்காதவன்' படமும் வெளியானது. இதிலும் வெற்றியை கைப்பற்றியது தனுஷின் படம்தான். 2011 ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் 'காவலன்' படமும் தனுஷின் 'ஆடுகளம்' படமும் வெளியானது. தேசிய விருது பெற்று கொடுத்து தனுஷை அடுத்த லெவலுக்கு அழைத்து சென்றது இந்த திரைப்படம்.  இப்படி விஜயுடன் தனுஷ் மோதிய படங்கள் அனைத்து படங்களும் வெற்றி பெற்றதால், இந்த முறையும் இப்படி ஆகும் என கூறமுடியாது. ஒரு வேலை இந்த செண்டிமெண்ட் ஒர்கவுட் ஆகிடுமோ... தீபாவளி வந்த தெரிஞ்சிடும் பாஸ்.