ஆபாசமாக கருத்து பதிவிட்ட ஒருவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி. திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் அஜித் ரசிகர் என்ற பெயரில் இருக்கும் ட்விட்டர் பதிவில், ஆபாசமான ட்வீட் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் தனது பெயரை சம்பந்தப்படுத்தியதற்காக நடிகை கஸ்தூரி வார்த்தைப் போரைத் தொடங்கினார்.

அஜித் ரசிகர் என்று சொல்லி அவரது பெயரை கெடுக்க வேண்டாம் என்று கடுமையான வார்த்தைகளால் எச்சரித்த நடிகை கஸ்தூரி, ஆபாச ட்வீட் செய்த அஜித் ரசிகர்களின் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்குகளைக் குறிப்பிட்டு ட்விட்டர் இந்தியா நிறுவனத்திலும் புகாரளித்துள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்களில் சிலர், உண்மையான அஜித் ரசிகர்கள் இப்படி பதிவிடமாட்டார்கள் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்தவார்த்தை யுத்தம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், நேற்று முதல் நடைபெற்று வரும் பிரச்சினையில் எனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அதேபோல் பெண்களை மதிக்கத் தெரிந்த அனைவருக்கும் எனது நன்றி.

இந்த விஷயத்தில் அஜித் குமார் மற்றும் ஷாலினி அவர்கள் தலையிட்டு ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்பவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அப்படியும் ஆத்திரம் அடங்காத கஸ்தூரி, ‘’அஜித் இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது தீவிர ரசிகர்களிடையேயான சண்டை அல்ல. இது பாலியல் அத்துமீறல். நான் மட்டுமல்ல, பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

இதற்கு பலரும் எதிர்கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நீயெல்லாம் ஒரு ஆளு.. உன் கருதத்தெல்லாம் தல எடுத்துக்கனும் பாரு... எவனோ எங்கயோ எது பண்ணாலும் தலய இழுத்துவிட்டு விளம்பரம் தேடிக்கறீங்க.. இதெல்லாம் ஒரு பொழப்பு இதுக்காக நீங்க வெட்கப்படனும்... நீங்கள் காயப்பட்டு இருக்கிறீர்கள், உங்களை தவறான நோக்கில் திட்டி இருகிறார்கள். அது கண்டிக்க பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் நீங்கள் அதை கையாளும் விதம் மிக தவறு. அஜித்தை பொறுப்பேற்றுக்கொள்ள சொல்வது எப்படி நியாயம் ஆகும். குழாயடி சண்டைக்கு எல்லாம். மன்னிப்பு கேட்க ஆரம்பித்தால் என்ன செய்வது. 

' அவனே எவன் செத்தா எனக்கு என்ன, ரசிகனாவது மயிராவதுனு நல்ல ஜாலியா சுத்திட்டு இருக்கான் அவன் கிட்ட போய் இந்த பஞ்சாயத்த கொண்டு போரிங்களே..? நாங்கள் நல்ல மனிதரின் ரசிகர்கள்னு வாய்ல வட சுட்ட இவனுங்கள எல்லாம் நம்ம தான் வச்சி செஞ்சு விடனும்'’என விஜய் ரசிகர்கள் உள்ளே புகுந்து எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றி வருகிறார்கள். 

 

அஜித் புகைப்படம் வைத்திருப்பவர்கள் எல்லாம் அஜித் ரசிகர்கள் இல்லை.  அவ்வாறு பேசியது மிகவும் தவறானது கண்டிக்கத்தக்கது. ஆனால் அதற்கு #dirtyAjithFans என பதிவிட்டு இருப்பதும் தவறு தான். நாளை ஒருவன் உங்க போட்டோவை டிபியில் வைத்து தவறாக பேசினால் கூட #dirtyKasthuriFans என பதிவிடுவீர்களா?‘என கஸ்தூரிக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.