தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015-ல் ரிலீசாகிய திரைப்படம் மாரி. கோலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இந்த திரைப்படம், ஒரு மெகா பிளாக் பஸ்டர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் தனுஷ் நடைத்திருந்த கேஷுவலான அந்த வேடம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் மாரி2 எனும் பெயரில் தற்போது தயாராகி வருகிறது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். சாய்பல்லவி, வரலஷ்மி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர், அரந்தாங்கி நிஷா போன்ற பலர் இந்த படத்தில் நடித்துவருகின்றனர். மாரி படத்தை போலவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் மாரி2-ம் செம மாஸாக தயாராகி வருகிறது.

 

I’m super privileged to share with you all, that the man who is the reason behind dance evolving in our country @PDdancing is choreographing a song for us in #maari2 .. grew up watching his magic. What a moment for me. Thank you sir. 🙏🙏🙏 pic.twitter.com/FU1fIxhrLV

— Dhanush (@dhanushkraja) August 1, 2018

இந்த பிரபலங்களின் கூட்டணியில்  தற்போது இன்னுமொரு பிரபலம் இணைந்திருக்கிறார். நடனத்திற்காகவே பிறந்து நடனமே உயிரென வாழும் பிரபுதேவா தான் அந்த இன்னொரு பிரபலம். சாதாரணமாகவே தனுஷின் நடனம் பற்றி புகழாதவர்களே கிடையாது. மாரி படத்தில் கூட அவரது இன்ட்ரோ நடனத்தில் தெறிக்கவிட்டிருப்பார் தனுஷ்.

தற்போது மாரி2-ல் அவருடன் பிரபுதேவா வேறு இணைந்திருக்கிறார் இதனால் மாரி2-ல் ஒரு அதிரடி நடனம் இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த சம்பவத்தை தனுஷே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.