‘எனது வயது குறித்து அதிக கமெண்ட்கள் வருகின்றன. நீண்ட நாள் கனவான ரஜினி படத்திலும் கமிட் ஆகிவிட்டதால், இனி எதைப்பற்றியும் டோண்ட் கேர்’ என்கிறார் ‘பேட்ட’ நாயகி த்ரிஷா. இன்று வாரணாசியில் துவங்கும் ‘பேட்ட’ படத்தின்  30 நாள் இறுதி ஷெட்யூலில் பங்கேற்கும் த்ரிஷா, ஞாயிறன்று நடந்த ‘96’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது ‘பேட்ட’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் பரபரப்பில் இருந்த அவர், ‘’நான் சினிமாவில் அறிமுகமான ’மவுனம் பேசியதே’ காலத்திலிருந்தே எதிர்கொண்ட நீண்ட கேள்விக்கு இப்போதுதான் ‘பேட்ட’ படத்தின் மூலம் பதில் கிடைத்துள்ளது. ஒருமுறையாவது ரஜினிக்கு ஜோடியாக நடித்துவிடவேண்டும் என்பது என் நெடுநாள் விருப்பம்.

ரஜினியை ஏற்கனவே பலமுறை சந்தித்திருக்கிறேன் எனினும், இதோ வாரணாசி பயணம் பெரும் படபடப்பை உண்டாக்கவே செய்கிறது.இனி நான் சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றாலும் கவலை இல்லை’ என்றார்.

37 வயதாகும் த்ரிஷா ரஜினி படத்தோடு ஓய்வெடுக்க கோடம்பாக்கம் அவ்வளவு சுலபமாய் அனுமதித்துவிடுமா என்ன?