கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள நடிகைகளின் செல்போன்களில் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

போதை பொருள் விவகாரம் தொடர்பாக கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

 

இந்நிலையில், போதைப்பொருள் விவகாரம் குறித்த தகவல்கள், ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணியின் செல்போன்களில் இருக்குமா என்பதை அறிய, இருவரின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அந்த போனிலிருந்து அழிக்கப்பட்ட தரவுகளை ரிக்கவரி செய்து போலீசார் ஆய்வு செய்ததாகவும் தெரிகிறது.

அப்போது ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், நிர்வாண புகைப்படங்கள் ஆகியவை இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக சஞ்சனாவின் போனில் பாலியல் தொடர்பான ஒரு வாட்ஸ்-அப் குரூப் இருந்ததாகவும், சஞ்சனா கைதான பின்னர் அந்த குழு கலைக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து போதை பொருள் விவகாரம் மட்டுமின்றி பாலியல் விவகாரம் குறித்தும் சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ள்ளனர்.