தன்னம்பிக்கைக்கும், தலைகனத்துக்கும் இருக்கிற இடைவெளி புரியாதவர்கள்தான் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் வரும்  அருள் அண்ணாச்சி இமேஜ் மீது சேறு வாரி பூசி வந்தனர். ஆனால் அவர் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. தானுண்டு, தன் நம்பிக்கை உண்டு என்று நாள்தோறும் புதுப் புது ஸ்டெப்களை எடுத்து வைத்து சினிமாவுக்குள் ஹீரோவாக காலடி எடுத்து வைத்து விட்டார்.  இத்தனைக்கும் “எனக்கு சினிமாவில் நடிக்கறதுல விருப்பம் இல்லே” என்று கூறி வந்தவர். 

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி ரசிகர்களுக்கு சின்ன வருத்தம்... நாயகியாக நயன்தாராவை எதிர்பார்த்து ஏமாந்து போய்விட்டார்கள். அதாவது பரவாயில்லை. அண்ணாச்சிக்கு  ஜோடியாகும் அறிமுக நாயகி கீதிகா திவாரியின் ஃப்ளாஷ்பேக்கை கேட்டால் தான் தலை சுற்றுகிறது.  அருள் அண்ணாச்சி நடிக்கும் படத்தில் ஜோடி போட தமிழின் பல முன்னணி நடிகைகளை தேடி வந்தனர். யாரும் சிக்காததால் பாலிவுட் நடிகைகளிடம் கேட்டு வந்தனர்.

அங்கும் யாரும் பிடிகொடுக்காததால் ஏடிஎம் திருடியை பிடித்து வந்து அண்ணாச்சிக்கு அண்ணியாக்கி உள்ளனர். அதனை மறைக்க தனது ஒரிஜினல் பெயரான கீதா தியாகி என்கிற பெயரை மறைத்து கீதிகா திவாரி என மாற்றி உள்ளார் அந்த மீடு நடிகை. அதற்கு முன் ஒரு பல ஃப்ளாஷ்பேக்... 2012ம் ஆண்டு, இயக்குனர் சுபாஷ் கபூர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மீடூகுற்றம் சாட்டினார் இந்த கீதிகா தியாகி. பத்திரிகையாளரான அவர் ஒரு டி.வி.தொலைக்காட்சி தொகுப்பாளினியாகி பிறகு மாடலாக மாறியவர். ஒரு முறை தனது சக செய்தி வாசிப்பாளரான ஒருவரின் ஏடிஎமை திருடி அதிலிருந்து பணத்தை எடுத்ததற்காக அந்தச் செய்தி நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டவர்.
 
இந்தச் சம்பவம் 2004 ஆம் ஆண்டில் நடந்தது. கீதா தியாகி ஒரு செய்தி சேனலில் பணிபுரிந்த போது அவர் இரவு 10 செய்தி பிரிவில் வாசித்துக் கொண்டிருந்தார். அவர் தனது தோழியுடன் தற்போது ஆம் ஆத்மி கட்சித் தலைவராக உள்ள ஷாஜியா இல்மியின் ஏடிஎம் கார்டைத் திருடி தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பணத்தை எடுத்துள்ளார் கீதா தியாகி.

அதாவது ஷாஜியாவும், கீதா தியாகியும் செய்தி வாசிக்கும் முன் இருவரும் ஒரே ஒப்பனை அறையைப் பகிர்ந்துகொள்வதால், கீதிகா ஷாஜியாவின் ஏடிஎம் கார்டைத் திருடியுள்ளார். இது குறித்து ஷாஜியா அவரது மூத்த நிர்வாகயிடம் புகார் செய்துள்ளார். ஆனால், அந்த மூத்த நிர்வாகியை மயக்கி கீதா தியாகி தான் அப்படி செய்யவில்லை எனக் கூறி உள்ளார். அந்த நிர்வாகியும் தியாகி ஆகி கீதா தியாகியை விடுவித்துள்ளார்.
 
ஆனால் இந்த விவகாரம் சிசிடிவி கேமிராவில் கீதா தியாகி தான் திருடி என்பதை நிரூபித்து விட்டது. இதனையடுத்து கீதா தியாகியை வேலையில் இருந்து நீக்கி விட்டனர். அதன் பிறகு அங்கிருந்து வெளியேறி, மாடலாகி, நடிகையாகி, பின்னர் இயக்குநர் சுபாஷ் கபூர் மீது பாலியல் புகார் கூறி, தற்போது சரவணா ஸ்டோர் அண்ணாச்சியிடன் நடிக்க பெயரை கீதிகா திவாரி என மாற்றிக் கொண்டு வந்துள்ளார் கீதா தியாகி. அண்ணாச்சி அருளும் தியாகியாகி இந்த கீதா தியாகியை கீதிகா திவாரியாக்கி அண்ணியாக்கி விட்டார்.