கடந்த 2015 ஆம் ஆண்டு, இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து  வெளியான, தனி ஒருவன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் சாதனை செய்தது.

இந்த திரைப்படம், இயக்குனர் மோகன் ராஜாவிற்கு மற்றும் இன்றி நீண்ட இடைவெளிக்கு பின் 'தனி ஒருவன்' திரைப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த, அரவிந்த் சாமிக்கும் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. 

இந்த படத்தில் நயன்தாராவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரம் இல்லை என்றாலும், தொடர் வெற்றிப்படங்களில் நடித்த நாயகியாக பார்க்கப்பட்டார். 

இந்நிலையில் இப்படம், வெற்றிபெற்றதில் இருந்து இயக்குனர் மோகன் ராஜாவிடம் ரசிகர்கள் பலர் எழுப்பி வந்த கேள்வி என்றால் அது... எப்போது தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போகிறீகள் என்பது தான். 

இந்த கேள்விக்கு தற்போது ஒரு வீடியோ மூலம் பதில் கொடுத்துள்ளார் மோகன் ராஜா. அதில் அடுத்ததாக தான் தனி ஒருவன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க உள்ளதாக  அறிவித்துள்ளார். இந்த வீடியோவில் திடீர் என தோன்றும் ஜெயம் ரவி, தான் தான் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.