'கண்ணே கலைமானே' படத்தை இயக்கிய இயக்குனர் சீனு ராமசாமிக்கு முத்தம் கொடுத்ததாக வெளிப்படையா கூறியுள்ளார் நடிகை தமன்னா.

'தர்மதுரை' படத்தை தொடர்ந்து, நடிகர் உதயநிதியை வைத்து சீனு ராமசாமி இயக்கி முடித்துள்ள திரைப்படம் 'கண்ணே கலைமானே' விவசாயம் சார்ந்த பிரச்சனைகள், காதல், குடும்பம், காமெடி என அணைத்து அம்சங்களும் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

இன்று வெளியாகியுள்ள இந்த படம் குறித்து, படத்தில் நாயகி தமன்னா கூறுகையில், 'கண்ணே கலைமானே' படம் முழுமையான காதல் கதை. நான் வங்கி அதிகாரியாக நடித்துள்ளேன். உதயநிதிக்கு இணையாக, எனக்கும் வலுவான கதாபாத்திரம் இந்த படத்தில் அமைத்துள்ளது.

இந்த படத்தை நான் திரையில் பார்த்து அழுது விட்டேன். படப்பிடிப்பில், எனது நடிப்பை சீனு ராமசாமி பாராட்டினார். நான் சிறப்பாக நடித்ததற்காக திருநெல்வேலி அல்வாவையும் கொடுத்து பாராட்டினார். 

எப்போது இயக்குநர் சீனு ராமசாமி படங்களில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும். 'தர்மதுரை' படத்தில், அதை உணர்ந்தேன். 'கண்ணே கலைமானே' படத்திலும், அந்த வலிமை இருக்கிறது. படம் சிறப்பாக வந்ததற்காக, அவருக்கு நான் முத்தம் கொடுத்தேன் என வெளிப்படையாக கூறியுள்ளார்.