ஐ.ஏ.ஆர்.எ. என்ற சர்வதேச விருது பரிந்துரை பட்டியலில் மெர்சல் படத்தில் நடித்த விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஐ.ஏ.ஆர்.எ. என்ற பெயரில் சர்வதேச சாதனை மற்றும் அங்கீகார விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நடப்பாண்டில் ஒரு இந்தியரின் பெயர் இடம்பெற்றுள்ளது. 

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் மெர்சல் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வெளியானது. படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூலை குவித்தது. இதன்படி இப்படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் 2018-ம் ஆண்டுக்கான ஐஏஆர்எ விருது பரிந்துரை பட்டியல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட வரும் இந்த சர்வதேச விருது பரிந்துரைப் பட்டியல்களில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்த விஜய் இடம்பெற்றுள்ளார்.

இந்த பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் இணையதளத்தில் வாக்களிக்கலாம். பாலிவுட் நடிகர்களின் பெயர் இடம்பெறாமல் இந்தியாவிலிருந்து நடிகர் விஜய் மட்டுமே தேர்வாகியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியை, ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.