உடல் தோற்றத்தை கிண்டல் செய்த வார இதழ்! இரவு முழுவதும் கதறி அழுத இளையதளபதி விஜய்!
நடிகர் விஜயும் சஞ்சீவும் 25 ஆண்டு கால நண்பர்கள். இருவரும் பத்ரி புதிய கீதை ஆகிய படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். சஞ்சீவ் தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் பிரபல நடிகராக உள்ளார்.
நடிகர் விஜயும் சஞ்சீவும் 25 ஆண்டு கால நண்பர்கள். இருவரும் பத்ரி புதிய கீதை ஆகிய படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். சஞ்சீவ் தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் பிரபல நடிகராக உள்ளார். இவர் அண்மையில் இணையதள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது விஜய் உடனான நட்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.
பேட்டியில் நடிகர் விஜய் நடிக்க வந்தபோது சந்தித்த எதிர்மறை விமர்சனங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகர் சஞ்சீவ், 20 வயதில் விஜய் நடிக்க வந்தபோது அவரது முகத் தோற்றத்தைப் பற்றி இதழ் ஒன்றில் கிண்டல் செய்து கட்டுரை வெளியிடப்பட்டிருந்ததை குறிப்பிட்டார். இதைப் படித்துவிட்டு நடிகர் விஜய் இரவு முழுவதும் உறங்காமல் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்ததாக சஞ்சீவ் தெரிவித்தார்.
அன்றைய தினம் புத்தாண்டு அல்லது கிறிஸ்துமஸ் ஆக இருந்தது என்றும் சஞ்சீவ் குறிப்பிட்டார். முக்கியமான ஒரு இதழில் இப்படி ஒரு விமர்சனம் எழுகையில் 20 வயது உள்ள ஒரு நடிகர் வெக்ஸ் ஆகத்தான் செய்வார். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் ஊடகங்கள் , பத்திரிக்கைகள், நடிகர்கள் , என அனைவரும் ரசிகர்களிடம் ஆதிக்கம் செலுத்தின. எனவே விமர்சனங்கள் அனைத்தையும் தகர்த்தெரிய முகத்தோற்றத்தை சிறப்பாக மாற்றி கொள்வதுடன் நன்றாக நடிக்க வேண்டும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற வேண்டும் படத்தை ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பு விஜய்க்கு வந்து சேர்ந்ததால் அவர் வெக்ஸ் ஆனதாகவும் அந்த வயதில் யாராக இருந்தாலும் விஜய் செய்ததை தான் செய்திருப்பர் என்றும் சஞ்சீவ் தெரிவித்தார்.
இதையடுத்து சாதிக்கத் துடித்த விஜய் தற்போது தடைகளை தகர்த்து சாதனை செய்து முடித்திருப்பதாகவும் எந்த இதழ் அவரை தொடக்கத்தில் கிண்டல் செய்ததோ அதே இதழ் பின்னர் முகப்பு படத்திற்காக விஜய்யின் புகைப்படத்தை கேட்டு வந்ததாகவும் சஞ்சீவ் பெருமையுடன் கூறினார்.
இதையடுத்து தமது கல்லூரி கால நினைவலைகளை அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்க்கு தாம் தான் ஆடுவதற்கு கற்று கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தங்கள் வாழ்க்கையில் தொழில் ரீதியாக யாரும் ஒருவரை ஒருவர் உதவிக்கு அழைக்க கூடாது என்ற ஒப்பந்தம் இருக்கும் காரணத்தால் விஜயுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு தற்போது தமக்கு கிடைக்கவில்லை என்றும் சஞ்சீவ் மனம் திறந்தார்.