ஒட்டு மொத்த அஜீத் ரசிகர்களுக்குமே இந்த ஆண்டு பொங்கல் தான் சிறப்பு, ஏனென்றால் இந்த ஆண்டு பொங்கலுக்கு தானே அஜீத்தின் விசுவாசம் திரைப்படம் ரிலீசாக இருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வேதாளம் , வீரம், விவேகம் படங்களின் வரிசையில் தற்போது மீண்டும் ஒரு வெற்றி கூட்டணியாக அமையவிருக்கிறது இந்த விசுவாசம் திரைப்படமும். 

இதனால் இத்திரைப்படத்தின் மீது அதிக அளவில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர் தல ரசிகர்கள்.
நயன்தாரா மீண்டும் அஜீத்துடன் ஜோடி சேர்ந்திருக்கும் இந்த திரைப்படத்தில் தல அஜீத் இரண்டு வேடங்களில் நடைத்திருப்பதாக முன்னரே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த திரைப்படத்தில் அண்ணன் தம்பி என இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் அஜீத் ஆக்ஷன் காட்சிகளில் கலக்கி இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விசுவாசம் திரைப்படத்தில் சண்டைக்காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்து வரும் சிவா, தண்ணீருக்கு அடியில் நடப்பது மாதிரியான ஒரு ஆக்ஷன் காட்சியை இந்த படத்தில் வைத்திருக்கிறாராம். பொதுவாகவே ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் தானே ரிஸ்க் எடுத்து நடிப்பது தான் அஜீத்தின் வழக்கம்.

இந்த தண்ணீருக்கு அடியில் எடுக்கப்பட இருக்கும் காட்சியிலும் அதிகம் ரிஸ்க் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த ஒரு முறை மட்டும் பயிற்சி பெற்ற டூப் ஆர்டிஸ்டை ஆக்ஷன் காட்சிக்கு பயன்படுத்தலாம் என ககூறி இருக்கின்றனர் படக்குழுவினர். எனக்கு ரிஸ்க் என்றால் ஸ்டண்ட் கலைஞருக்கும் அது ரிஸ்க் தானே! அதனால் அந்த ரிஸ்கை நானே எடுத்து பார்க்கிறேன் என சொல்லி தைரியமாக களமிறங்கி இருக்கிறாராம் தல அஜீத்.