சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்டோர்  நடித்து வருகின்றனர். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் ஐதராபாத்தில் உள்ள  ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக திரைத்துறை சார்ந்த அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. 

இதையும் படிங்க: ஊரடங்கில் வீட்டுக்குள் புகுந்து விளையாடும் மன்மத ராசாக்கள்... அதிகரித்த ஆணுறை விற்பனை...!

ஏற்கனவே அஜித்தின் விவேகம் படத்தை சொன்ன தேதிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக வேக, வேகமாக போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகளை முடித்தராம் சிறுத்தை சிவா. அதனால் கதையில் கூட சில இடங்களில் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அப்படிப்பட்ட நிலை சூப்பர் ஸ்டாரின் படத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதால் மிக கவனமாக செயல்படுகிறாராம்.

இதனிடையே,  அஜித்குமார் - சிறுத்தை சிவா ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து 4 வெற்றி படங்களை கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த வெற்றி கூட்டணி மீண்டும் 5வது முறையாக ஒன்றிணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க:  “இதுதான் என் கடைசி போட்டோ”... கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு தலைமறைவான சனம் ஷெட்டி...!

அஜித்தை வைத்து விஸ்வாசம் படத்தை இயக்குவதற்கு முன்னதாகவே சிறுத்தை சிவா ஸ்பேஸ் தொடர்பான கதை ஒன்றை தயார்படுத்தி வைத்துள்ளதாகவும், அதில் தல அஜித் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. அந்த கதையை தான் சிறுத்தை சிவா இப்போது இயக்க உள்ளாராம். அதில் தல நடிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.