அல்டிமேட் ஸ்டார் அஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இது நாள் வரை ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்த படத்தில் மீண்டு நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் அஜீத். அது மட்டுமல்ல இந்த படத்தின் மிக முக்கியமான சிறப்பு என்ன என கூறும் போது நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் அஜீத் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் இது என்பது தான்.

இதனால் விசுவாசம் படம் மீது மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் அஜீத் ரசிகர்கள். சமீபத்தில் ரிலீசாகி இருக்கும் இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் அந்த எதிர்பார்ப்புகளுக்கு நல்ல தீணியாக அமைந்திருக்கிறது. இந்த விசுவாசம் படத்தின் படப்பிடிப்பின் போது அஜீத் ரசிகர்கள் பலரும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டிருக்கின்றனர்.

அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் மிக பிரபலமாகி இருக்கிறது. 

சமீபத்தில் அஜீத்துடன் புகைப்படம் எடுத்து கொண்ட தெலுங்கு நடிகை மீனா வாசு , அஜீத்தின் தீவிர ரசிகை ஆவார். அஜீத்தை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துகொண்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் மீனா. அஜீத்தின் எளிமையான சுபாவத்தை பார்த்து அசந்து போயிருக்கிறார்.
 இவ்வளவு பெரிய நடிகர் மிக எளிமையாக எந்த வித பந்தாவும் இல்லாமல் ஒவ்வொருவரிடமும் தன்மையாக நடந்து கொள்கிறார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் சில நடிகர்களை பார்த்திருக்கிறேன். ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் கூட பந்தாவாக நடந்து கொள்ளும் அவர்கள் எல்லாம் அஜீத்தின் காலில் விழுந்து அவர் பாதங்களை கழுவினால் தான் அவர்களுக்கு புத்திவரும். 

அப்போது தான் அஜீத்தின் நற்குணங்களில் 10 சதவீதமாவது அவர்களுக்கு வரும் என கூறி இருக்கிறார்.
 யார் மீது இருக்கும் கோபத்தில் அவர் இப்படி கூறி இருக்கிறார் என தெரியவில்லை. ஆனால் அஜீத் பற்றி அவர் கூறியது முற்றிலும் உண்மை. வெற்றி என்பது எப்போது நிலைத்திருக்காது அது அஜீத் மாதிரியான நல்ல மனிதர்களுக்கு தான் எப்போது பொருந்தும் என்று கூறியதுடன் தன்மையாக நடப்பது எல்லோருக்குமே நல்லது தான் என்றும் கூறி இருக்கிறார்.