வரவர தமிழ்ராக்கர்ஸ்காரன்களின் குறும்பு எல்லை கடந்து போய்க்கொண்டிருக்கிறது.ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து தற்போது லேட்டஸ்டாக விஜய் பட பாட்டையும் கடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

யெஸ் நேற்று சர்கார் படத்தின் டிராக் லிஸ்ட்டை சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் வெளியிட்டது. அந்த ட்வீட் வெளியான அதே  வேகத்தில் அனைத்து பாடல்களையும் வெளியிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

முன்பெல்லாம் படங்களை மட்டும் சுட்டு தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டியதோடு நில்லாமல், பாடல்களில் அதுவும் சன்பிக்‌ஷர்ஸ் அரும்பாடுபட்டு, ரசிகர்களுக்கு போட்டியெல்லாம் நடத்தி பில்ட் அப் தந்துகொண்டிருந்த நிலையில், தமிழ்ராக்கர்ஸின் இந்த அசால்ட்டு சேது’ செயல் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சன் பிக்‌ஷர்ஸின் தற்போதைய ஆஸ்தான நடிகரான ரஜினி தலைமையில் இன்று மாலை இசை வெளியீட்டு விழா நடக்க உள்ள நிலையில் நேற்றே அந்த பாடல்களை தமிழ் ராக்கர்ஸில் இருந்து பலரும் டவுன்லோடு செய்துவிட்டனர்.

 சர்கார் பாடல்கள் வெளியான சிறிது நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கப்பட்டது.  அடங்குவார்களா? இதையடுத்து சில நிமிடங்களிலேயே மெட்ராஸ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் அந்த 5 பாடல்களும் வெளியிடப்பட்டன. ஸோ இன்றைய பாடல் வெளியீடு என்பது வெறும் சம்பிரதாயம்தான்.

’சர்க்கார்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் ஒரு பாடல் கூட பாட வாய்ப்பு தராத சோகத்தில் சோர்ந்து போயிருந்த விஜய் ரசிகர்களின் வெந்த புண்ணில் இப்படி வேல் பாய்ச்சலாமா தமிழ்ராக்கன்ஸ்?