பட வாய்ப்பு வேண்டும் என்றால், படுக்கையை பகிர வேண்டும் என்று பிரபலங்கள் கூறியதால் அவர்களது ஆசைக்கு விருந்தான நடிகை ஸ்ரீரெட்டியை பற்றி தான் தற்போது தமிழ் திரையுலகமே பரபரப்பாக பேசி வருகிறது.

இதுவரை கோலிவுட் திரைப்பிரபலங்கலான, ஸ்ரீகாந்த், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர் .சி, லாரன்ஸ், நடிகர் சந்தீப் கிஷன், ஆதி என பலரது பெயரை முன்வைத்து வரும் இவர், தொடர்ந்து பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பெயரை கண்டிப்பாக வெளியிடுவேன் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பலரது பெயர்களை டாமேஜ் செய்து வரும் இவரின் பிரச்சனை குறித்து தற்போது நடிகர் சங்கத்தினர் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, ஸ்ரீரெட்டி எந்த வித ஆதாரமும் இன்றி பேசுவதாக கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னிடம் 90%  ஆதாரம் உள்ளதாகவும். நேரம் வரும் போது  அதை வெளியிடுவேன் என கூறினார்.

தனக்கு கோலிவுட் திரையுலகிலாவது நியாயம் கிடைக்கும் என சென்னைக்கு வந்துள்ள இவருக்கு முதல் முறையாக தமிழ் திரையுலகை சேர்ந்த, பிரபல நடிகை கஸ்தூரி ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் அவருடைய ட்விட்டர் பகுதியில் கூறியுள்ளது " எக்கச்சக்கமானவங்க #tamilleaks பத்தி கேட்குறாங்க.என் வாட்சப்  முழுக்க மீடியாவின் #srireddy கேள்விகளால் நிரம்பி வழியுது. 

இன்னிக்கி அவங்க பிரபல தனியார் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி பார்த்தேன். தரமான , நேர்மையான நேர்காணல். அந்த பொண்ணு கண்ணுல உண்மை இருக்கு. I feel sorry for her.  I believe her. என பதிவிட்டுள்ளார். 

இதுவரை பல தொலைக்காட்சிகள், மற்றும் ஊடகங்கள் ஸ்ரீரெட்டி பற்றி பேசிய போது... ஒரு பிரபலம் கூட இவருக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் இருந்த நிலையில் தற்போது இவருக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி பேசியுள்ளதை பலர் வரவேற்றுள்ளனர்