இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் வெளியாகி நல்ல வசூல் சாதனை படைத்தது வருகிறது. இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படம் தெலுங்கில் 'சின்ன பாபு' என்கிற பெயரில் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

கார்த்தி விவசாயியாக நடித்திருக்கும் இந்த படத்தில் குடும்ப உறவுகளின் மகத்துவத்தை மையமாக வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

இந்த படத்தை பார்த்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில் "சமீபத்தில் தெலுங்கில் வெளியான 'சின்னபாபு' படத்தை பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில் நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மாற்றும் வாழ்க்கை முறைகளை எந்த ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரஸ்யமான படம்" என்று பாராட்டி கூறியிருந்தார்.

இதற்கு வெங்கையா நாயுடுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். "நாட்டின் மிகப்பெரிய தலைவரான நீங்கள், படத்தை பார்த்து பாராட்டியது மகிழ்ச்சியை தந்தது" என்று அவர் கூறியுள்ளார். மேலும் நடிகர் கார்த்தியும் வெங்கையா நாயுடுவுக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான "சின்னபாபு" (தமிழில் "கடைக்குட்டி சிங்கம்") திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம். #KadaiKuttySingam #Chinababu @Karthi_Offl pic.twitter.com/aovbdukEH0
— VicePresidentOfIndia (@VPSecretariat) July 16, 2018

நாட்டு மக்களின் பெருமதிப்புக்குரிய தாங்கள்,எங்களின் படைப்பான 'கடைகுட்டி சிங்கம்' திரைப்படத்தைப்  பார்த்து மனம்திறந்து  பாராட்டியது,எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும்,தங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள்.🙏 #KKS @pandiraj_dir https://t.co/zJuOaN1E5z
— Suriya Sivakumar (@Suriya_offl) July 16, 2018