Asianet News TamilAsianet News Tamil

சூர்யாவின் மாஸ்டர் ப்ளான்: ஹரி, சிவா, கவுதம், வெற்றிமாறன், லோகேஷ்... போதும் போதும் லிஸ்ட் நீண்டுக்கிட்டே போகுது...

'காப்பான்' படத்திற்குப் பிறகு, நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் 'சூரரைப் போற்று'. 'இறுதிச்சுற்று' புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில், மாறா என்ற கேரக்டரில் சூர்யா நடிக்கிறார். 
 

surya new films list
Author
Chennai, First Published Nov 14, 2019, 11:20 PM IST

ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்திற்கு, பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.சமீபத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சமூக வலைதளங்களில் அசத்தலான வரவேற்பை பெற்றது. 

surya new films list

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக்கு ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு, சூர்யாவின் அடுக்கட்ட ப்ளான் என்னவென்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 'சூரரைப் போற்று' படத்தை முடித்தவுடன், அடுத்து அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் நடிக்க சூர்யா முடிவு செய்துள்ளாராம். இது, சூர்யா நடிக்கும் 39-வது படமாகும்.

surya new films list
இதனையடுத்து, சூர்யாவின் 40-வது படத்தை இயக்குநர் ஹரியும், அடுத்த படத்தை இயக்குநர் கவுதம் மேனனும் இயக்குவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், தேசிய விருது இயக்குநர் வெற்றிமாறனும் சூர்யாவிடம் கதை சொல்லி ஓ.கே.வாங்கிவிட்டாராம். இதனால், சூர்யாவின் 42 வது படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

surya new films list

இதுதவிர, மாநகரம், கைதி புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் என சூர்யாவின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

surya new films list
ஒரு படத்தை முடித்த பிறகுதான், அதன் ரிசல்ட்டை பொருத்து, அடுத்த படம், இயக்குநர் உள்ளிட்டவற்றை முன்னணி நடிகர்கள் முடிவு செய்வது வழக்கம். 

surya new films list

ஆனால் அவர்களிடமிருந்து முற்றிலும் வித்தியாசமாக, தனது அடுத்தடுத்த படங்கள், அதன் இயக்குநர்கள் யார்? என்பதை சூர்யா முடிவு செய்து, அதற்கேற்ப திட்டமிட்டு நடித்து வருவது திரையுலக பிரபலங்களை ஆச்சரியப்படுத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios