தமிழ் சினிமாவில் கால் பதித்த... சூர்யா - கார்த்தி சகோதரி..!
பழம்பெரும் நடிகரான சிவகுமாரின் வாரிசுகள் சூர்யா - கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். இந்நிலையில் திரைத்துறையின் பக்கமே வராமல் இருந்த சிவகுமாரின் மகள் பிருந்தா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.
இயக்குனர் திரு இயக்கத்தில், நவரச நாயகன் கார்த்தி மற்றும் அவருடைய மகன் கெளதம் கார்த்தி இருவரும் இணைந்து நடித்து வரும் 'மிஸ்டர் சந்திரமவுலி' படத்தின், டைட்டில் படலை பாடியிருக்கிறார் பிருந்தா. கவிஞர் வித்யா தாமோதரன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா பங்கேற்று தன்னுடைய சகோதரியை அறிமுகம் செய்து வைத்தார்.